சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!



இன்று உணவு, உடை, இருப்பிடம், குடிநீரைப் போல அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது ஏ.சி. ஆனால், ஏ.சியிலிருந்து வெளியாகும் வேதிப்பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று சூழலியல் ஆர்வலர்கள் குரல் எழுப்பிவருகின்றனர்.சமீபத்தில் ‘சவுண்ட் எனர்ஜி’ நிறுவனம் சூரிய வெப்பத்தில் இயங்கும் ‘தியாக்-25’ என்ற ஏ.சியை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்கு பேண்டு வாத்தியக் கருவி போலத் தெரியும் இந்த ஏ.சி.யில் மின்சாரம், குளிர் சாதனப் பெட்டி இல்லாமல் வெப்பத்தைக் குளிரவைக்கும் அகௌஸ்டிக் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ‘‘தொழிற் சாலைகளில் அனல்கக்கும் பெரிய இயந்திரங் களிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை உள்வாங்கிகாற்றையோ, தண்ணீரையோ குளிர்விக்க முடியும்...’’ என்கிறது ‘சவுண்ட் எனர்ஜி’.
25 கிலோவாட் திறன்கொண்ட ‘தியாக்-25’ ஏ.சியால் -25 டிகிரி சென்டிகிரேடு  குளிர்ச்சியை உருவாக்க முடியும். நாம் பயன்படுத்தும் ஏ.சி-க் களில் உள்ள வேதி  திரவம் மற்றும் வாயு  இதில் இல்லை. இதன் பாகங்கள் அசையாது. இதில்  ‘ஆர்கான்’ என்ற  சுற்றுச்சூழலுக்குக் கேடுதராத வாயுவை மட்டுமே பயன்படுத்துவதாக நிறுவனத்தினர் சொல்கின்றனர். இப்போது இந்த ஏ.சி-யை பெரிய ஆலைகள், கட்டடங்களுக்கு மட்டுமே பொருத்த முடியும். ‘‘விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சியை வடிவமைப்போம்...’’ என்கிறது சவுண்ட் எனர்ஜி. அந்த ஏ.சி. சுற்றுச்சூழலுக்குக் கேடாக இருக்காது என்று நம்புவோம்.

🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁🜁நன்றி:க.கதிரவன்

No comments:

Post a Comment