சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள்
காலத்தால் அழியாதவை.
உண்மையின்
பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும்
தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள்
வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள
மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத்
தாவும் குரவும்-வெங்
கனலிற்
பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை
தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து
சமன்செயும் குட்டை முனியும்,
நதியி
னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர்
உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற
வேமணம் செய்த-திறல்
வீமனும்
கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற்
றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென்
றோதிமற் றொன்றுபொய்யென்னும்
நன்று
புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல
கவிதை பலபல தந்தார்.
கவிதை
மிகநல்ல தேனும்-அக்
கதைகள்
பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில்
வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும்
கட்டுக் கதைகள் அவைதாம்.
🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻
0 comments:
Post a Comment