பற்களுக்கான பற்பசை -

பற்பசை:நம் பெற்றோர்களில் பலர் தாங்கள்  பயன்படுத்தும் அதே பற்பசையையே தங்களது குழந்தைகளுக்கும் வாங்குவார்கள். இதுமுற்றிலும் தவறானது, பற்கள விழுந்து முளைக்கின்றவரையில் அந்தந்த வயதுக்கு ஏற்ற பற்பசைகளை உபயோகிப்பதே சிறந்தது. இன்றைய நவீன பற்பசை தயாரிப்பில் மூன்றேமூன்று புளோரைடுகள்தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அவையாவன, சோடியம்புளோரைடு (Sodium Fluoride, NaF),  ஸ்டன்னஸ்புளோரைடு (Stannous Fluoride, SnF2), சோடியம் மோனோ புளோரோ பாஸ்பேட் (Sodium Mono-fluoro-phosphate, Na2Po3F) ஆகியனவாகும். பற்பசை தயாரிக்கும் நிறுவங்களை பொறுத்து பயன்படுத்தப்படும் புளோரைடும் மாறுபாடடைகிறது. பெரும்பாலான நிருவனங்களால் சோடியம் புளோரைடு மற்றும் சோடியம் மோனோ-புளோரோ பாஸ்பேட்தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை பற்களை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்பட்டாலும்கூட தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது ஈறுகளை (Enamel) தாக்கும்தன்மைகொண்டவை. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ஸ்டன்னஸ் புளோரைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பற்பசைகளே சிறந்தவை. இவை சற்று விலை அதிகமாக இருந்தாலும் இவற்றை பயன்படுத்துவதே பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது.
பற்களை அழகாக வைத்திருக்க:-பெண்களின் அழகை மெருகேற்றி காட்டுவதில் பற்களுக்குத்தான் முதல்இடம். பற்களில் சிறிதுகறை இருந்தாலோ, விரிசல் மற்றும் சொத்தை இருந்தாலோ முகஅழகே சிதைந்துபோய்விடும். ஆகவே பெண்மணிகளே, பற்களை அழகாக வைத்துக்கொள்ள உதவும் உணவுவகையை ருசித்துசாப்பிடுங்கள்.
கடல்வாழ் உணவுவகைகள் மற்றும் டீயிலும் பற்களை மினுமினுக்க வைத்திருக்கக்கூடிய புளூரைடு அதிக அளவில் உள்ளது. இது பல்சொத்தை, பல்வலி, போன்ற பல் சம்பந்தமான பிரச்சினைகளை வரவிடாமல் தடுத்து விடுகிறது. இது ஈறுகளை பாதுகாப்பதோடு பலமடையவும் செய்கிறது.
பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாப்பதில் இரும்புசத்தின் பங்கு இன்றியமையாதது. இது நகங்களின் அழகை தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது.


No comments:

Post a Comment