சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகுதி 04


இன்று மக்கள் மத்தியில் நல்மார்க்கங்கள் எடுத்துச் செல்லப்படாது பதிலாக பயமுறுத்தப்பட்டு/ஆசை காட்டப்பட்டு  பணமும் ,பொருளும் களையப்படுகின்றன. இதனால் மக்கள் மனங்கள் சிதறடிக்கப்பட்டு நிம்மதியிழந்து வாழ்வதனால் ஆலயங்கள் பாடு மேலும் கொண்டாடங்களாகவே இருக்கின்றன,எனவே உண்மையான ஆன்மிக வழியினை உணர்த்தும் அங்கமாக இத் தொடர் கயல்விழி-பரந்தாமனால்  எடுத்து  வழங்கப்படுகிறது.

ஆன்மீகம் என்ற பெயரில்    அலங்கோல - அமங்கல வழிபாடு

                  இன்றைய   காலத்தில் பலர் ஆன்மீகம் என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும், ஒரு தெய்வத்தை வழிபாடு செய்கின்றோம் என்று கூறி கொண்டு, ஆயிரக்கணக்கான தெய்வங்களை அங்கங்கே உருவாகி உருவாக்கி, ஆகமம் என்ற பெயரில் ஒரு சில பூசை விதிகளை நிர்ணயம் செய்து கொண்டு, முருகனுக்கும், சிவனுக்கும் காவி உடை, ஐயப்பனுக்கு கருப்பு உடை, நீல நிற உடை, அம்மனுக்கு சிவப்பு உடை என பள்ளி சிறுவர்கள் போல் சீருடை அணிந்து கொண்டும், ஆண்கள் தாடி, மீசை, சடை முடிவைத்துக் கொண்டும், பெண்கள் பூவைக்க கூடாது, பொட்டு வைக்ககூடாது ஒரு குறிப்பிட்ட உணவு தான் உண்ண வேண்டும், தினமும் பசனை செய்ய வேண்டும், என பல செயல்களை செய்துவருவார்கள். இன்னும் சிலர் பிரார்த்தனை என்ற பெயரில் மிருகம், கடவுள் என வேடம் தரித்துக் கொள்தல், கரும்புள்ளி, செம்புள்ளி என சரீரத்தில் குத்தி கொள்தல் வேப்பிலையை ஆடையாக தரித்துக் கொள்தல் போன்ற செயல்களை செய்து, தங்கள் உருவத்தை தாங்களே அலங்கோல படுத்தி கொள்வார்கள்.
                  இந்த அலங்கோல ஆன்மீகத்தை மக்களுக்கு கூறி வழி நடத்தும் போலி நபர்கள், சித்தர்பீடம், சக்தி பீடம், என வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பணம் பறிப்பார்கள். இந்த போலி நபர்கள் அம்மாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் குறி சொல்லுதல், வாக்கு சொல்லுதல் என எதையாவது கூறி அதற்கு பரிகாரம், பிராயசித்தம் என்ற பெயரில் இந்த பாமர மக்களை ஏமாற்றி தன் வாழ்க்கையை சுகமாக அமைத்துக் கொள்வார்கள்.
                   இது போன்ற செயல்களை நம்பும் மக்கள், இந்த போலி நபர்களிடம் சக்தி உள்ளதாக எண்ணிக் கொண்டு தான் ஏமாறுவது தெரியாமல் ஏமாந்து கொண்டு இருப்பார்கள். இந்த மக்களை சிறு தெய்வ வழிபாடு செய்பவர்கள் என்று மற்றவர்கள் கூறுவர். இது போன்ற வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல. பக்தி என்ற பெயரால் தங்களை ஏமாற்றி கொள்தல் ஆகும். இந்த அலங்கோல பக்தி முறையாலும் தன் வாழ்வின், கஷ்டம், பிரச்சனை, இவைகளை தீர்க்க முடியாது.



0 comments:

Post a Comment