இன்னும் கொங்கனசித்தர் கூறும் இந்த போலி குருமார்களை
பற்றி கேளுங்கள்.
பூரணம் நிற்கும் நிலையறி
யான்
பொய்சொல்வான் கொடிமந்திரஞ்
சொல்வான்
காரணகுரு அவனுமல் லவிவன்
காரிய குரு பொருள் பறிப்பான்
எல்லாமறிந்தவ ரென்றுசொல்
லியிந்தப்
பூமியிலே முழுஞானி யென்று
உல்லாசமாக வயிறு
பிழைக்கவே
ஓடித்திரிகிறார் வாலைப் பெண்ணே
- என்கிறார்.
கலிகால போலி குருமார்கள்
முழுமையான ஞானம் எப்படி அடைய வேண்டும்? ஆன்மா என்றால்
என்ன? என்று அறிய மாட்டான். ஆன்மீகம் என கூறி பல கோடி வேறு விளக்கங்களை, பொய்யான மந்திரங்களைக் கூறுவான். இதனை தன்
பக்தர்களுக்கு கூறி பொருளை, பணத்தை ஏமாற்றி
பறித்து கொள்வான். தனக்கு எல்லாம் தெரியும், நானே பெரிய ஞானி, என்பான். இவன் மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை
ஆராய்ந்து எப்படி ஏற்பட்டது என்று காரணத்தை கூறும் பிறரிடம் பொருளை ஏமாற்றி
பறித்துக் கொள்ளும் காரிய குரு இவன். இவன் உல்லாச வாழ்க்கை வாழ ஊர், ஊராக சென்று மக்களை ஏமாற்றி, பணம் பறிப்பவன்
என்று புரிந்து கொள் என்கிறார் குரு.
இன்னும் இந்த கலி கால போலி
குருமார்களைப் பற்றி என்குரு காகபுசுண்டரிஷி கூறுவதை கேளுங்கள்.
பாரப்பா சீடர்களை அழைப்பான்
பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோ
மென்பான்
ஆரப்பா பிரம்மநிலை காட்டா
மற்றான்
ஆகாச பொய்களையும் மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்கு பாவமாச்சு
நிட்டை சொல்லுங்
குருக்களுக்குத் தோடமாச்சி
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப்
பாரான்
விதியாலே முடிந்த தென்று விளம்பு வானே
- என்கிறார்.
இன்றைய கலிகால போலி குருமார்கள் ஊர், ஊராக நாடு,நாடாக சென்று, மக்களை விளம்பரபடுத்தி அழைப்பான். ஞான உபதேசம், பிரம்மநிலை, அறிதல், யோக பயிற்சி, நல்வாழ்வு அடைய உபதேசம், வாழ்வில்
உண்டாகும், பிரச்சனை, கஷ்டம், வறுமை தீர வழிகாட்டுதல் தவம், தியான பயிற்சி, வகுப்பு என கூறி பறிப்பான். ஆனால் வாழ்வில் ஏற்படும் கஷ்டம் தீர
வழிகாட்டமாட்டான் நம்ப முடியாத ஆகாய பொய்களையும், புராண இதிகாச
கதைகளையும் கூறி ஏமாற்றிவிடுவான். இவனை நம்பி செல்லும் சீடனுக்கும், பக்தனுக்கும், மக்களுக்கும்
மேலும், மேலும் பண விரையமும், பாவமும் தான் சேரும் இந்த குருவிற்கு சாபதோஷம் உண்டாகும். இவன் உடல், உயிர், ஆன்மாவின் தத்துவம் தெரியாதவன், பிறப்பும், வாழ்வும், இறப்பும் எதனால்
என்று கேட்டால் இது "விதி" படி நடந்தது என்று கூறி விதியை காரணம்
காட்டுவான்.
இந்த போலி குருமார்களை நம்பி
பின்செல்லும் சீடனும், பக்தர்களும், மக்களும் பணத்தை இழப்பார்கள். இவர்கள் ஆன்மாவையும் அறிய மாட்டார்கள், தன்னையும் அறிய மாட்டார்கள். இந்த போலி குருமார்களை நம்பி பின்னால் அலையும்
சீடனும், பக்தனும் வாழ்வில் உயர்வை அடைய மாட்டார்கள்.
ஆனால் இந்த போலி குருமார்கள் பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பர வாழ்வு கௌரவம் என அடைந்து விடுவார்கள். இவர்கள் நம்பும் சீடனை நர
குழியில் தள்ளி விடுவார்கள்.
தொடரும்.....
ஆரம்பத்திலிருந்து படிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...:அடுத்த பகுதி 3 வாசிக்க ...
Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு.3.
No comments:
Post a Comment