சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / பகுதி 02B


தொடர்ச்சி...

தற்போது இது போன்ற ஆடம்பர ஆன்மீகம் செய்யும் போலி குரு              மார்களிடம்  வியாபார போட்டி அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு குருவும் தொலைகாட்சியிலும், வாரப் பத்திரிக்கைகளிலும், வானொலி மூலமும், வசதி உள்ளக் குருமார்கள் தங்கள் மடத்தின் பெயரில் சொந்தமாக புத்தகம், பத்திரிக்கை வெளியிட்டும் தன்னைப்  பற்றி கற்பனை கதைகளை  எழுதியும், மக்களை ஏமாற்றி பணம் பறித்துக்  கொண்டு, தங்கள் வாழ்வை சுகமாக அமைத்து கொள்கின்றார்கள்.

இன்றைய  கலி காலத்தில் தன்னை குரு என்று கூறிக் கொள்பவர்எப்படி இருப்பார்கள் என்பதை என் குரு கொங்கணசித்தர் அன்றே கூறியுள்ளதை  கேளுங்கள். 

குருடான செத்தெழுத்தை யுபதேசிப்பான்

 கூறு கெட்ட பாவிசெய்த கொடுமை ஐயோ

  திருடான மருளன் பூரணமே யென்பான்

  தீர்த்த மென்பான் கொவிலென்பான்            தெய்வமென்பான்

 மருடான மருடனப்பா மயங்கி மாள்வான்

 மனதார உபசாரக் காரஞ் செய்யமாட்டான்

 அருளான அருளைனைப்போற் பரமே யென்பான்
  அம்பலத்தை காணாத அசடனாமே - என்கின்றார்



அதாவது, இந்த போலி குருமார்கள் ஒன்றுக்கும் உதவாத நான்கு ஐந்து எழுத்துகளை கூறி தீட்சாமந்திரம் என்பான். தீட்சை என்பான், இவன் திருடனாவான். தன்னை நாடி வருபவர்களிடம் புண்ணிய தீர்த்தம், முக்தி தரும் தலம் என்று ஏதாவது  பொய்க் கதைகளை கூறுவான். இதனை கேட்பவர்கள் இவன் பேச்சு சாமர்த்தியத்தால் இவன் கூறுவதை கேட்டு மயங்கி விடுவார்கள்.  இவன் கேட்கும், பொருள், பணத்தை தந்து விடுவார்கள். ஆனால் இந்த குரு பிறருக்கு மனதார உபகாரம் நன்மை செய்ய மாட்டான். பெரிய அருள் சக்தி  தன்னிடம் உள்ளது போல் வெளியில் காட்டிக்  கொள்வான். இவன் ஆன்மா  இருக்கும் இடம் தெரியாத அசடன் என்கின்றார் என்குரு .

ஆரம்பத்திலிருந்து படிக்க →
Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...:01
                                                                                                                பகுதி:2C வாசிக்க   
Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு2C 

No comments:

Post a Comment