எதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும் காணாமல் போகலாம்?


சொக்லெட், மீன், உருளைக்கிழங்கு இல்லாமல் போகும் அபாயம்

பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகளுக்கோ, குளிர்பானங்களுக்கோ நாம் பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் மீன்கள், விலங்குகள் செத்துப் போகலாம்.

எனவே எதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும் காணாமல் போகலாம். ஏன் தெரியுமா?

நீங்கள் காபி குடிப்பவரோ அல்லது தேனீர் அருந்துபவரோ. ஆனால் அது நீடிக்கப்போவதில்லை.

பருவநிலை மாற்றத்தால் 2050 ஆம் ஆண்டிற்குள் காபி பயிரிடப்படும் இடங்கள் பாதியாக குறையலாம். 2080 ஆம் ஆண்டிற்குள் சில காபி பயிர்களின் வகைகள் அழிந்து போகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காபி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தான்சானியாவில், ஏற்கனவே கடந்த 50 வருடங்களில் அதன் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. எனவே தேனீருக்கு மாறலாம் என நினைத்திருந்தால் உங்களுக்கு இந்தியாவின் விஞ்ஞானிகள் ஒரு செய்தியை சொல்ல காத்திருக்கிறார்கள்.

தேயிலை செடிகள் வளர்க்கூடிய காலநிலை மாறிவருவதால், அது பயிர்களின் சுவையை மாற்றுகிறது என்பதுதான் அந்த செய்தி.

எனவே அதிக நறுமணம் இல்லாத, அதிக நீர்த்தன்மைக் கொண்ட ஒரு தேனீரை குடிப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

பருவநிலை மாற்றத்தினால் இதன் விளைச்சல் பாதிக்கப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

கோகோ காய்களுக்கு அதிகப்படியான வெப்பநிலையும், மிக அதிகமான ஈரப்பதமும் தேவை. அதுவே நிலையானதாகவும் இருக்க வேண்டும்.

காபிச் செடிகளை போன்றே, கோகோ செடிகளுக்குமான தேவையும் அதிகமாக உள்ளது. எனவே காலநிலை, மழை, மண்ணின் தரம், சூரிய ஒளி அல்லது காற்றின் வேகம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது விளைச்சலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தோனீஷியா மற்றும் ஆப்ரிக்காவில் கோகோ பயிரிட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் பாமாயில் மரங்கள் மற்றும் ரப்பர் மரங்களை பயிரிட சென்றுவிட்டார்கள்.

40 வருடங்களில், கானா மற்றும் ஐவரி கோஸ்டின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் கோகோ ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு இந்த நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே அது சாக்லெட்டிற்கு ஆபத்தாக அமைந்துள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு நீங்கள் அதிர்ச்சியாகலாம் ஆனால் இதைவிடவும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

மீன்களும், உருளைக்கிழங்குகளும்கூட இந்த ஆபத்தில் உள்ளன. மீன்கள் சிறியதாகி கொண்டே வருகின்றன.

பெருங்கடல்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டு இருப்பது அதற்கு ஒரு காரணம். கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சிக் கொள்வதால் கடல்நீர் மேலும் அமிலமயமாகிறது. எனவே கிளிஞ்சல் மீன்கள் போன்ற மீன்களுக்கு அதன் கிளிஞ்சல்கள் வளர்வது கடினமாக உள்ளது

சர்வதேச அளவில் மீன் பிடித்தல் 5 சதவீதம் குறைந்துள்ளது.

வட கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு தெரியும் அது மூன்று மடங்கு குறைந்துள்ளது என.

அப்படியானால் உருளைக்கிழங்குக்கு என்னவாகும்?

அது மண்ணுக்கு அடியில் விளைந்தாலும், அடிக்கடி ஏற்படும் வறட்சியால் அதன் விளைச்சல் பெரிதாக பாதிக்கப்படும்.

2018ஆம் ஆண்டில் பிரிட்டனின் ஒரு கோடைக்காலத்தில் உருளைக்கிழங்கின் விளைச்சல் பாதிக்கும் மேற்பட்ட அளவு குறைந்துவிட்டது

தென்மேற்கு பிரான்ஸில் 600 வருடம் பழமையான `காக்நாக்` பிராந்தியை தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால் அதனை தயாரிக்க பயன்படும் திராட்சைகள் அதிக இனிப்புத் தன்மைக் கொண்டதாக மாறிவிடுகிறது. இதனால் காய்ச்சி வடிப்பது சிரமமாக இருக்கும்.

இதற்கு மாற்று கண்டுபிடிக்க ஒவ்வொரு வருடமும் ஏராளமான யூரோக்கள் செலவு செய்யப்படுகின்றன. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.

அதனை தொடர்ந்து ஸ்காட்லாந்தில், விஸ்கி தயாரிப்பிலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வறட்சியால் நல்ல தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த கோடைக்காலத்தில் அதிகப்படியான விஸ்கி தயாரிப்பாளர்கள் தங்கள் ஆலைகளை மூடும் நிலை ஏற்பட்டது. வானிலை நிபுணர்கள் தீவிரமான வானிலை அடிக்கடி ஏற்படும் என எச்சரித்தனர்.

பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது. இந்தியாவின் நிலையோ இந்த வருடம் சில இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி வரை செல்லும் அளவுக்கு இருந்தது.

இதே நிலைதான் பியர் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சியால் விளைச்சல் பாதிப்பு ஆகிய காரணங்களால் பியர் தயாரிப்பாளர்கள் சரிவை சந்தித்து வருகின்றனர்.

இந்த பொருட்கள் அனைத்துமே தனிப்பட்ட முறையில் நீங்கள் பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். ஆனால் சர்வதேச உணவுச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பெரிதான ஒரு மாற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வை இழக்கக்கூடும்.

விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டால் விலை ஏற்றம் வரும். உணவுப் பற்றாக்குறையால் மனித குலத்தில் குற்றங்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகரிக்கும். அரசியலில் ஸ்திரமற்றநிலை ஏற்படும். எனவே இது இனியும் உங்களை சார்ந்தது மட்டுமல்ல.

0 comments:

Post a Comment