ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தைக் கடக்க முயற்சி செய்தனர்.
தந்தை சொல்கிறார் “என் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கோ”
மகள் சொல்கிறாள் “நீங்க, என் கையைப் பிடிச்சிக்கோங்க”
“ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?” தந்தை கேட்கிறார்.
“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்த ஒரு நிலையிலும் என் கையை விடமாட்டிங்கப்பா” என்றாள் மகள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் பெற்றோர் , பிள்ளையை கைவிடமாட்டார் என்பதற்கு இது ஒரு உதாரணம். பிள்ளைகள் எப்படி நடந்தாலும் பிள்ளைகளோடு கோவித்துக்கொண்டிராதவர்கள் பெற்றோர்கள். ஏனெனில் பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் என்றும் குழந்தைகளே.
ஆனால் ,என்னதான் செய்தாலும் பெற்றோருடன் சிறுவயதில் வராத கோவம் பிள்ளைகளோ திருமணமாகிவிட்டால் பெற்றோர் நடந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து கோவம் வருவது வேகமாகவே இருக்கிறது.
மனிதத்தினை மதியாது , உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்ற திருமூலரின் வாக்கினை உணராது அடுத்தவர் உள்ளத்தினை உடைத்துக் கொண்டு பட்டினியுடன் விரதமிருந்தென்ன, தினசரி ஆலயம் சென்றென்ன,நேர்த்திக்கடன் வைத்தென்ன ,எதுவித பலன் எதுவுமில்லை!
0 comments:
Post a Comment