திரையில் -பிக் பாஸ்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்,தனுஷ் ,அஜித்,கௌதம்,சிவகார்த்திகேயன்


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சேரனுக்கு 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அபிராமி, மதுமிதா ,ரேஸ்மா, சாக்ஷி ஆகியோருக்கு நாளொன்றுக்கு 25 ஆயிரமும் , மோகன் வைத்யா சாண்டி, கவின் சரவணன் ஆகியோருக்கு நாளொன்றுக்கு 35 ஆயிரமும் மீரா மிதுன் , ஷெரின்  ஆகியோருக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரமும் முகன்ராவ் , டார்சன் , லாஸ்லியா ஆகியோருக்கு தலா ரூபாய் 5 லட்சமும் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்தும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களை வைத்தும்  ‘பொன்னியின் செல்வன்’படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம். 
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
கடந்த 2016ஆம் ஆண்டே கௌதம் மேனன் தனுஷை வைத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா'

இப்படம் வருகிற 26ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
பரபரவென  பிஸியாக ஆரம்பித்துவிட்டார் அஜித்.  பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கத் தயாராகிவருகிறார். டைட்டில் தேர்வு நடைபெற்று வருகிறது.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
கார்த்திக், நரேன் இயக்கும் படம் 'மாஃபியா'. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
`சர்கார்’ ரெடி. கௌதம் மேனனுடன் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’க்கு ரெடியாகலாம் என்று பேசியிருக்கிறார்கள். ‘இப்ப விஜய் சார் ரேஞ்ச் இன்னும் உயரம். பக்காவா ரெடிபண்ணிட்டு சொல்றேன்’ என்றிருக்கிறார் கௌதம்.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
சிறுவயதிலிருந்தே பாரதிராஜா படங்கள் என்றால் விஜய்சேதுபதிக்கு மிகவும் இஷ்டம். விஜய்சேதுபதி முதியவர் வேடத்தில் நடிக்கும் சீதக்காதி படத்தில் பாரதிராஜாவும் நடிக்க இருக்கிறார். அதுவும் பாரதிராஜாவாகவே வருகிறாராம். இதனால் விசே செம உற்சாகத்தில் இருக்கிறார்!
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
`எழுமின்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடிக்கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்தப்பாடல் பதிவை வெறும் ஒன்றரை மணிநேரத்தில் முடித்துக்கொடுத்திருக்கிறார்.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
கோலமாவு கோகிலா’ முதல் ஷோ முதல் காட்சிக்கு சிவகார்த்திகேயன் நண்பர்களுடன் ஆஜர். சில வருடங்களுக்கு முன் சிம்பு நடிக்க நெல்சன் இயக்கத்தில், பாதி தயாராகி நின்ற ‘வேட்டை மன்னன்’ படத்தில் நெல்சனுக்கு உதவி இயக்குநராகவும் இருந்து ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவும் செய்திருந்தார் எஸ்கே. அந்த நட்புதான் காரணம்.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
டேராடூனில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் படப்பிடிப்பு. பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சியில் பிஸியாக இருக்க, ‘கூப்பிடுங்க அவரை’ என்றார் ரஜினி. கேக் தயாராக இருக்க பீட்டர் ஹெய்னின் பர்த்டே கொண்டாட்டம் தடாலடியாக நடந்தது. நெகிழ்ந்துபோய்விட்டாராம் பீட்டர் ஹெய்ன்.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹

No comments:

Post a Comment