48 மெகாபிக்சல்களுடன் உலகின்
முதலாவது சுழலும் மூன்று கமெராக்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோனாக தமது புதிய Galaxy A80 இனை இலங்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தது Samsung Sri Lanka.
லைவ் தன்மையின் மூலம் மக்கள்
ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள அல்லது ஈடுபடுவதற்கு ஏற்றவாறு இந்த smartphone வடிவமைக்கப்பட்டடுள்ளது.
உடனடியாக எடுக்கப்படும் படங்கள், லைவ் வீடியோக்களை ஸ்ட்ரீம்
செய்தல், தற்போது நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் நேரடியாக தொடர்பில் இருந்த வண்ணம்
பகிரும் அனுபவத்தினையும் இது வழங்குகிறது.
கட்டியிழுக்கும் full-screen
display, உடன் intelligent battery இனையும் இது கொண்டுள்ளது.
பாவனையாளர் camera app இல் selfie mode இனை தெரிவுசெய்யும் போது மூன்று
கமெராக்களும் தன்னியக்கமாக ஃபோனின் பின் பக்கத்தால் வெளியே வந்து சுழலும். இதன்
முன் பக்க மற்றும் பின் பக்க லென்ஸ்கள் உயர் தெளிவினை வழங்குவதால் எடுக்கப்படும்
படத்தின் தரத்தில் ஒரு குறையும் இருக்காது.
48MP பிரதான கமெராவுடன் நுகர்வோருக்கு வேறுபட்ட படங்களை தற்போது எடுத்திட முடியும்.
Galaxy A80 யின் 3D Depth camera ஆனது Live Focus videos இனை வழங்குவதுடன் பொருட்களை, அதன் அளவுகளை தெரிந்துகொள்ள ளஉயn செய்கிறது. Ultra Wide angle lens உடன் தயாரிக்கப்பட்டுள்ளதனால்
மனிதரின் பார்வையை ஒத்த காட்சியையும் வழங்குகிறது.
Super Steady video mode ஆனது pro-level action வீடியோக்களை அசைவுகள், சலனங்கள் அற்ற விதத்தில் எடுக்க உதவுகிறது. அத்தோடு மற்றைய intelligent camera வானது Scene Optimizer இனை கொண்டுள்ளது. இது 30 விதமான காட்சிகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அதிலுள்ள
குறைபாடுகளை தாமாகவே கண்டறிந்து கிளிக் செய்ய முன் சரிசெய்கிறது. இதனால் நீங்கள்
உன்னதமான படங்களை தவறவிடாது அழகாக எடுத்துக் கொள்ள முடியும்.
Galaxy A80 இன் Intelligent Performance Enhancer ஆனது AI-powered performance optimization software இனைக் கொண்டுள்ளது. இது உங்கள்
சாதனத்தின் battery, CPU மற்றும் RAM என்பவற்றை சரிசெய்ய உதவுகிறது.
ட்ரைவ் செய்தல், வேலையில் இருத்தல் போன்ற உங்கள்
வழக்கமான நடைமுறைகளை கற்றுக் கொண்டு Bixby Routines, உங்கள் அன்றாட பணிகளை
தானியங்குபடுத்துகிறது.
📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲
No comments:
Post a Comment