ஆடம்பர வழிபாடு
ஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆடம்பர வழிபாடு என்பது பெரும்பாலும் பணம், பொருள் வசதி உள்ளவர்களால் கடைபிடிக்கப்படும் பாதையாகும். இந்த ஆடம்பர வழிபாட்டின் கர்த்தா யார் என்றால் மடாதிபதி, பீடாதிபதி, குரு, ஆச்சாரியார் என பெயர் வைத்துக்கொண்டு பணம் படைத்தவர்களை, செல்வந்தர்களை தமக்கு சீடராக வைத்துக் கொண்டு,அவர்களிடம் பணம், பொருள், சொத்தை ஏமாற்றி வாங்கி தான் சுகமாக வாழும் எண்ணம் கொண்டவர்கள் .
இவர்களாகவே ஒரு பெயர் வைத்துக்கொண்டு, அல்லது சித்தர்கள்,ரிஷிகளின் பெயரை சொல்லிக் கொண்டு, அல்லது முதலிருந்து பெயர்பெற்றவரின் அடுத்த அவதாரம் என்று கூறிக்கொண்டு அதற்கு மடம், பீடம் என பெயர் வைத்துக்கொண்டு தங்களை மிகவும் சக்தி உள்ளவர்கள் போல் உலகில்
காட்டி கொள்வார்கள். அரசியல் தலைவர்கள் தனக்கு கீழ் தொண்டர்களை வைத்து கொள்வதுபோல்
, இந்த போலி குருமார்கள் தனக்கு கீழ் சீடர்களை வைத்துக் கொண்டு, நாடெங்கும்
மன்றங்களையும், கிளை மடங்களையும், அமைத்து கொண்டு,அங்கங்கே சின்ன சாமியார், பெரிய சாமியார், தலைமை சாமியார் என பதவிகளை
நியமித்து,ஒரு தனி வழிபாட்டு வியாபாரம் செய்து வருபவர்கள்.
:அடுத்த பகுதி 2B படிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /2B
முதலிலிருந்து படிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...:01
No comments:
Post a Comment