💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]

வெளிநாட்டில்

வேலை வாய்ப்பு என்று

வெளியான செய்தி கண்டு

களிப்போடு கற்பனைகளோடு

அக்காரியாலயம் கண்டு

விழிப்போடு விண்ணப்பம் நிரப்பி

துளி,துளியாய்த் துட்டும் கொடுத்து

எளிதாகவே இனி வாழ்வில்

எழும்பிவிடலாம் என எண்ணி

வழி ,வழியே கடிதம் வருமென்று

 வாசலில் காத்திருந்து

கனமான கனவுகளுடன்

கன நாள் கடந்திடவே,

மனமிருக்க வொண்ணாது-அக்

காரியாலயம் காணவென்று

காரைநகர் பேருந்திலே

யாழ்நகர் அடைந்தபோது

வெறிச்சோடிக் கிடந்த -அக்

காரியாலயம் அதனுள்ளே

வெறியோடு சீட்டாடும்

அறியாத கும்பல் கண்டு

முறியாத விம்மலோடு

வீடு திரும்பிய

அந்த நாள்!

⇢⇢⇢⇢⇢⇢⇢⇢⇢⇢⇢⇢✍செல்லத்துரை,மனுவேந்தன் 

No comments:

Post a Comment