இன்றைய மக்கள் இடையே
ஆன்மீகம் என்பது கடவுள் வழிபாடு செய்வதே ஆன்மீகம், என்று கருதப்படுகிறது.. ஆனால் தமிழ் சித்தர்கள்
தாங்கள் கூறிய சித்தாந்த நெறிப்படி
"ஆன்மீகம்" என்பதற்கு மிக
தெளிவாக கூறியுள்ள கருத்துகளை பற்றி
அறிவோம்.
ஆன்மா+அகம் என்பதே ஆன்மீகம் எனப்படும். ஒவ்வொரு மனிதனும், தன் அகத்தின் உள்ளே மறைந்து செயல்படும் ஆன்மாவை
அறிதலே
ஆன்மீகம், அல்லது தன்னையறிதல், ஞான நிலையை அடைவது என தெளிவாக கூறி உள்ளார்கள்.
இன்றைய மக்கள் இடையே ஆன்மீகம்
என்பது கோயில்,குளம், தேர், திருவிழா, பூஜை, மந்திரம், ஹோமம், யாகம், நேர்த்தி, காவடி, போன்றவற்றை செய்வது, கடவுள் சம்பந்தமான புராண, இதிகாச கதைகளை படிப்பது, மந்திர உபன்யாசம் கேட்பது, யாராவது ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் கூறும் ஒரு வாசகத்தை பாராயணம் செய்வது, போன்று இன்னும்
பலவித சடங்கு, சம்பிராதய செயல்களை செய்து கொண்டு, இதனை ஆன்மீகம் என்று கூறித் தம்மை த் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
இன்னும் சில மக்கள் ஜோதிடம் என்ற பெயரிலும், அருள்வாக்கு என்றும், சித்தர்வாக்கு, ரிஷிகள் வாக்கு எனக் கூறிக் கொண்டு திரியும் போலி நபர்கள் பேச்சைக் கேட்டு பரிகாரம், விரதம், புண்ணிய யாத்திரை செய்து இதனை
ஆன்மீகம் என்று கூறி வாழ்வினை விரையம் செய்கிறார்கள்.. இந்த வகையில் ஆன்மீகம் என்ற பெயரில் பணம் படைத்தவர்களுக்கு ஒரு
வகை, பணம்
இல்லாதவர்களுக்கு ஒரு வகை, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வகை, ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வகை என பல பிரிவுகளை கொண்டு மக்களிடையே
காணப்படுகின்றது.
இவர்களின் வழிபாடு பல வகைகளாக உள்ளன அவை :
1. ஆடம்பர வழிபாடு
2. அலங்கார வழிபாடு
3. அலங்கோல வழிபாடு
4. அமங்கல வழிபாடு
5. அவலட்சண வழிபாடு
என இது
போன்று இன்னும் பல வகைகள் உண்டு.
-அடுத்த பகுதி 02A இனைப் படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...: 2A
No comments:
Post a Comment