கரடு முரடு
வாழ்வு
என்று
விடிவு இன்றி
வாழாதே
உன் மனதை
உரமாக்கி
எழுந்து பாரு
வளம் கொண்டு
நிமிந்து
விடுவாய்
மானிடர் தரும்
இன்னல்
கண்டு
திறமையை மறைத்து
வாழாதே
மனத்திரையில்
போராட்டம் நிறைந்து
விட்டால்
போதையில் நாட்டம்
கொண்டு
புதை
குழியில்
தள்ளி வாழ்வை
தூர மாக்காதே!
இன்பமும் துன்பமும்
இணைந்த வாழ்வில்
உன் நிலை
இழக்காது
துணிந்து போராடிப்
பாரு
உன்னை நோக்கி
உனக்காக விடியும்
நாளைய விடியல்
✋✋✋✋✋✋✋✋காலையடி,அகிலன் ✋✋✋✋✋✋✋✋
No comments:
Post a Comment