பேசுதல், எழுதுதல் மறக்கப் போகும் மனிதன்

அசுர வேகத்தில் வளரும் தொழிநுட்பம் 
மனிதன் தான் பேசுவதை, எழுதுவதை நிறுத்துவானா?

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து தனது சிந்தனைகளை மற்றவர்களுடன் பரிமாற்றம் செய்வதற்கு பலவிதமான ஊடகங்களை உபயோகப்படுத்தி வந்துள்ளான்.

தொடக்கத்தில் சில சமிக்ஞைகள் மூலம் தனது எண்ணங்களை தெரியப்படுத்தி வந்தான். அதைத் தொடர்ந்து, ..., ... என்று பல விதமாக ஒலிகளை ஒலிப்பதன் மூலம் தொடர்பு கொண்டு பேசினான்.

பின்னர் ஒரு சில அடையாளங்களைக் கீறிக் காட்டி அதை வைத்து விளங்க வைத்தான். நாளடைவில் இவைகளை எழுத்துக்களாக அடையாளப்படுத்தி ஒவ்வொரு அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டான்.
 
எழுத்துருக்கள் வந்த பின்னர் கற்தூண்கள், 
ஓலைகள், தோல்கள் போன்றன மீது கீறியும், வர்ணத்தினால் வரைந்தும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டான்.

நாளடைவில் எழுத்துக்கள் சேர்ந்து சொற்கள், வசனங்கள் ஆகி முழு சம்பவங்களை குறிக்கும் அளவுக்கு மொழியை விருத்தி ஆக்கினான்.

கடதாசியை கண்டுபிடித்ததும், மை கொண்டு அதன்மேல் எழுதப் பழகிக் கொண்டான்.

எழுத்துக்களை கோர்த்து, இயந்திரம் மூலம் கடதாசியில் படிவம் எடுத்து படிக்கத் தொடங்கினான்.

அதன் பின்னர், தட்டச்சுக் கருவி வந்ததும் கடதாசியில் தட்டச்சு அடித்து வாசிக்கத் தொடங்கினான்தொடர்ந்து, மின் தட்டச்சு உதவியால் விரைவாக அச்சடிக்கப் பழகிக் கொண்டான்.

கணினி புரட்சியைத் தொடர்ந்து, மனிதன் காலம் காலமாக பேசி வந்த பழக்கம் இல்லாமல் போய் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தனது நாளாந்த அலுவல்களை செய்து கொண்டிருக்கின்றான்.

கடதாசியில் எழுதி தொடர்பு பரிமாற்றம் செய்து கொள்வது படிப்படியாக போய் மின்னஞ்சல் வழக்கத்துக்கு வந்ததால், கடதாசி என்பது அவசியமற்றது என்ற நிலையில் உலகம் தற்சமயம் சென்று கொண்டு இருக்கின்றது.

மனிதன் ஒருவருக்கொருவர் வாயாரப் பேசிக்கொள்வது இல்லாது போய் விட்டது!
மனிதன் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதுவதும் இல்லாமல் போய் விட்டது!
மனிதன் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதும் இல்லாமல் போய் விட்டது!


இப்போது கதைப்பதை கிரகித்து தட்டச்சு அடிக்கும் செயலிகளும் வைத்துள்ளதால் நமது கை விரல்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்ட்து.

எழுத்துலகில் , எழுத்தும் போய், கை அடிப்பும் இல்லாது போய் விட்ட்து!

வரும் காலத்தில், பேச்சும் தேவை வராது; நாம் எம் மூளையில் நினைப்பதை அப்படியே செய்தியாக அடித்து மின்னஞ்சலிலோ அல்லது வேறு எதோ அஞ்சலிலோ அனுப்பி வைக்கும் தொழில் நுட்பம் வந்து விடும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

செல்வதுரை,சந்திரகாசன்


1 comment:

  1. மதன். வேனுMonday, June 24, 2019

    எப்படித்தான் மாறினாலும் பண்பாட்டில் சீரழிந்தே போய்க்கொண்டிருக்கிறான்.

    ReplyDelete