மறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா


cat-mouse
நன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள்  என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய  ஒன்றுதான். ஏனெனில் எதற்கும் மறுத்துப் பேசுவது தான் வாழ்வாகக் கொண்டவர்களோடு அதிகம் பேசிவிட முடியாது. பயனும் கிடையாது.

சிலர் ஒரு விடயத்தினைப் பூரணமாக அறிந்து வைத்திராமலேயே ,மறுத்துப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்அது அர்த்தமற்றது.

ஆரோக்கியமான முறையில் அவசியமான கருத்தில் எது ஒன்றையும் மறுக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில்எவரையும் புண்படுத்த நமக்கு உரிமை இல்லை என்பதை நாம் உணர்ந்துவைத்திருக்க வேண்டும்.

மறுப்புகளை முகத்தில் அறைந்தாற்போல் சொல்வதில்லை, என்கிற கொள்கையில் தீர்மானமாக இருங்கள்.

உங்களுக்கு எப்படி இல்லை; முடியாதுன்னு சொல்றதுன்னுதான்யோசிக்கிறேன்என்கிற பதிலில் மென்மையும் இருக்கிறது. ”முடியாதுபோய்யாஎன்கிற வலிமையான எதிர்மறைச் செய்தியும் இருக்கிறது.

மறுப்புச் சிரிப்பு சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மறுப்புச் சிரிப்பா? இது என்னசிரிப்பு? இதை எப்படி வெளிப்படுத்துவது? கற்றுத் தாருங்கள் என்பவர்களுக்குஎன் பதில் இதுதான். முகத்தை சற்றே அதிருப்தியாக வைத்துக் கொள்ளவேண்டும். தலையை எதிரும் புதிருமாக வலுவாக ஆட்டாமல் மெதுவாகஆட்ட வேண்டும்.
 ஒரு வார்த்தைக்கூட நீங்கள்சொல்லவில்லை. ஆனால் எதிராளிக்கு உங்களது இயலாமையை அழகுறச்சொல்லிவிட்டீர்கள்.
அது வந்து. அது வந்துஎன்ற இடைவெளி விட்டு இழுத்து இழுத்துவாக்கியத்தை முடித்து விடாமல் மொட்டையாக முடிப்பதும் ஒருவிதமறுப்புதான். ஏன் இந்தாள் இப்படி அசடு வழியறாரு என்று எதிரி முடிவிற்குவந்தாலும் பரவாயில்லை. புண்படாதபடி மறுத்துவிட்ட வெற்றி நமக்கேசொந்தம்.

எந்த ஒரு சீவனும் இன்னொரு சீவனால் துன்புறுத்தப்படக் கூடாது.துன்புறுத்த நினைத்தால் காட்டு விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு கிடையாது.

🤙தொகுப்பு:செ .மனுவேந்தன் 


No comments:

Post a Comment