வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்

தந்தை என்கின்ற போதினிலே  எம்
சிந்தை சிறக்குது ஏற்றத்திலே

விந்தையாய்  அந்த  வாழ்வினிலும்
எந்தையாய்  எமை ஏற்றபோதும்
கந்தையாய்  காலம் கழிந்தபோதும்
மந்தையாய்  மனம லைந்த போதும்
 வாழ்ந்து வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!

பேசாது  குழப்படிகள் படைத்தபோதும்
கூசாது பொய்யுரைகள்  குவித்தபோதும்
தூசாய் பணத்தினைத்  தொலைத்தபோதும்
வீசாத  சினம் காத்து  விசித்திரமாய்
வாழ்ந்து வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!

நற்றவனாக்க  நாலு கதைகள்  கூறி
கற்றவனாக்க  கல்விக் குதவி செய்து
சுற்றமும் என் பெயர் சொல்ல எமைப் 
பெற்றதே இன்பம் பேரின்பம் என்று
வாழ்ந்து வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!

பெற்ற தாயெமைள்ளி அணைத்திடச் செய்து
 கற்றவர் கண்ணிலெமைத்   தாங்கிட செய்து
சுற்றமும் வாழ்த்தி யெமை ச் சுற்றிடச் செய்து
வற்றாவெயர்வையிலெயெமைக் குளிரச் செய்து
வாழ்ந்து வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!

கூடப் பிறந்து குடும்பமாய் கூடிய உறவுகளின்
மாடவாழ்வுக்கே  வழிகாட்டியாய்எம் வாழ்வின்
பாடப் புத்தகமாய்  படிந்திருந்து  எம்நெஞ்சில்
 வாழ்ந்து வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்
வாழ்ந்து வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!

🧒செல்லத்துரை ,மனுவேந்தன் 

விளம்பரம் பத்திரிகையில் ....[thantha ikku vazhththukkal ]

No comments:

Post a Comment