எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன




எறும்புகள் ஒருவிதமான வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன.
  சமூகமாகக்கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசளைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன. சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பத்ல்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உடவுகின்றன.
  சாரண எறும்புகள் உணவு இருக்கும் இடத்தை தேடிக் கண்டிபிடித்தவுடன் கூட்டுக்குத் திரும்புகின்றன. திரும்பும்போது இவை சும்மா திரும்பாது. வழி முழுவதும் வேதிப்பொருளைக் கசியவிட்டுக்கொண்டுதான் வரும். இந்த வேதிப்பொருளின் பெயர் பெரோமோன் எறும்புகளின் வயிற்ரின் பெரோமோன் சுறக்கிறது. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டுகிறது. எறும்புகள் வாசனையையும், சுவையையும் தங்களின் ஒரே உறுப்பால்தான் அறிந்துகொள்கின்றன.
  வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ஆகியவையும் தங்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.
  சில இனத்தைச் சேர்ந்த எறும்புகள் அடையாளங்களை நினைவு வைத்துக்கொண்டுதான் வழி கண்டுபிடிக்கின்றன. அவ்வகையான எறும்புகள் சுற்றுப் பகுதியில் ஓடியலைந்து தேடித்தான் உணவைக் கண்டுபிடிக்கும்.
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜

பேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் பி.கே. மனோகரன்

பேச்சுஇறைவன் மனிதனுக்களித்த அரிய பரிசு. விலங்குகளிடமிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டுவது பேச்சுதான். மிருகங்கள் பேசாமல் வாழ முடியும். ஆனால் மனிதர்கள் பேசினால்தான் வாழ முடியும். நாக்கும் அதிலிருந்து வெளிப்படும் வாக்கும் இருபெரும் செல்வங்கள்.
சமுதாய வாழ்க்கையின் அஸ்திவாரம் பேச்சு. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுதான் வடிவம் கொடுக்கிறது. பேச்சு வாழ்வின் உயிர் மூச்சு. மூச்சு உள்ளவரை பேச்சு இருக்கும். பேச்சு இல்லையென்றால் மூச்சு நின்று விட்டதற்கு ஒப்பாகும்.
பேச்சு என்பது ஒரு மாபெரும் கலை. வாழ்விற்கு வேண்டிய அடிப்படையான அரிய கலை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கின்ற வல்லமை பேச்சுக்கலைக்கு உண்டு. இது கல்லாதவரையும் கற்றவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்புக் கலை.
பேச்சின் பேராற்றல்
பேச்சுக்குப் பேராற்றல் உண்டு. அந்த பேராற்றலால் அகிலத்தையே புரட்டிப் போட்ட வரலாற்று நிகழ்வுகள் ஏராளம். சிறந்த பேச்சு கோழையையும் வீரனாக்கும். நயவஞ்சகர் களையும் நல்லவர்களாக்கும், தேசவிரோதி களையும் தேசபக்தர்களாக்கும்.
சிறப்பாகப் பேசுவோர் பிறரைக் காட்டிலும் வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிச் செல்கின்றனர்’. வெற்றி பெற விரும்பினால் பேசுவதை கலையாகக் கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு வாழ்வைத் தொலைத்தோர் ஏராளம்.
பயனில்லாத சொற்களை சொல்லக் கூடாது. “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்என்கிறார் வள்ளுவர். பயன் இல்லாத சொற்களால் பிறரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இகழ்ச்சிக்கு உள்ளாகக்கூடும்.
பேசும் மொழிநடைகளைப் போலவே உபயோகப்படுத்தும் வார்த்தைகளும் முக்கிய மானது. வார்த்தைகளின் பயன்பாட்டிலும், அதன் உச்சரிப்பிலும் கவனக்குறைவாக இருந்தால் கருத்து வேறுபாடுகளும், கசப்புணர்வும் ஏற்பட்டு நட்டமும் தோல்வியும் ஏற்பட வாய்ப்புண்டு. வெளிப்படுத்தும் வார்த்தைகள் அவருடைய அறிவுக்கூர்மை, ஒழுக்கத்தரம் போன்றவற்றை வெளிப்படுத்தும். 
மாட்டுக்கு பல்லைப் பிடிச்சுப் பார்க்கணும், மனிதனுக்கு சொல்லைப் பிடிச்சுப் பார்க்கணும் என்பது பழமொழி. சொல் மிகப் பெரிய தாக்கத்தையும், வலிமையையும் தரக்கூடியவை. சொல்லால் யுத்தத்தையும் தொடங்க முடியும், அமைதியையும் உண்டாக்க முடியும்.
பிறரோடு நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே. வார்த்தைகள் பூப்போன்றவை. தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மாலையாகும். நமக்கு மதிப்பு கிடைக்கும். வார்த்தைகளை கட்டுப் படுத்தி விட்டால் வாழ்வில் வெற்றிகரமான இணக்கம் நிலவும். எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லும் போது வள்ளுவர் இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்றுஎன்கிறார்.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராவது உங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டினால், ‘அடடா, நல்ல வேளை நீங்கள் சொன்னீர்கள், இதுவரை நான் கவனிக்கவே இல்லை, உங்களுக்கு மிக்க நன்றிஎன்று சொன்னால் சுட்டிக் காட்டியவரேஅதனாலென்ன, பரவாயில்லைஎன்று நமக்கே ஆறுதல் சொல்வார். இதுதான் வார்த்தைகளின் வலிமை.
சொற் பிரயோகம்
யுத்தத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைவிட பயங்கரமான ஆயுதம் நாக்கு. அதனால்தான்யாகாவராயினும் நாகாக்கஎன்று கூறி நாக்கை அடக்கிய மனிதனே மாமனிதன் என்கிறார் வள்ளுவர். “பேசாத மொழி உன் கையிலிருக்கும் வாள். பேசிய மொழி உன் எதிரிக்கு நீ கொடுத்த வாள்”. நாவிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லையும் மனதில் சற்று நேரம் நிறுத்தி, கேட்பவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று ஆராய்ந்து தெளிந்த பின்னரே வார்த்தையை வெளியிட வேண்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும்.
நாவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திட முடியாமல், தங்களை நாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்திருப்பவர்கள், வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். அவமானமும் அமைதி யின்மையுமே அவர்களை வந்தடையும்.
வேலையின்றி வெட்டியாகப் பேசுவோ ரிடம் தவறான சொற்பிரயோகத்தின் பாதிப்பை அதிகம் காணலாம். இவர்களின் குதர்க்கமான வார்த்தைப் பிரயோகங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும். ஆக்கபூர்வ சிந்தனையும், அதிக வேலைப் பளுவும் கொண்டவர்களை ஒருவர் ஜாடை யாக, குத்தலாக வார்த்தைகளைப் பிரயோகித்தாலும், அதிலுள்ள தவறான அர்த்தத்தை ஒதுக்கித் தள்ளி விட்டு அவரோடு சகஜமாக கலந்துரையாடும் அழகைப் பார்க்க முடியும். இத்தகை யோரிடம் அனர்த்தமான வார்த்தைகள் கூட அவற்றின் குறைகள் நீக்கப்பட்டு அர்த்தமுள்ள தாகி விடுகின்றன. கசப் பான சொற்பிரயோகம் தங்கள் மனதை பாதிக்கா வண்ணம் கையாளும் இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது.
கட்டுப்பாடு
பேச்சு சிந்தனையின் ஒரு பகுதி. அதனால் எதை யாரிடம் பேசுவது, எதை எவரிடம் பேசக் கூடாது என்பதைப் பகுத்தறிந்து பேச்சைக் கட்டுப் பாட்டிற்குள் வைக்க வேண்டும். ‘கால் இடறிவிடுவதால் ஏற்படும் காயத்தை விட நாக்கு இடறிவிட்டால் ஏற்படும் காயம் அதிகம்என்பதை மறந்து விடக்கூடாது.
பேச்சை அளவறிந்து பேசவேண்டும். தேவைக்கு அதிகமாகப் பேசினால் நன்மைக்கு பதிலாக தீமையே ஏற்படும். அதிகமாகச் பேசப் பேச பொய் பேச வேண்டி வரும். இல்லாத செய்தியை இருப்பதாக கூறுவதுதான் தவறான பேச்சு. தவறான பேச்சினால் உங்கள் தரம் தாழ்ந்து போகும்.
நிறைவாக
புத்தகத்தில் இருப்பதை படித்து புரிந்து கொள்ள படிப்பறிவு வேண்டும். பேச்சைப் புரிந்து கொள்ள காது கொடுத்து கேட்டால் போதும். பேச்சு என்பது மாபெரும் கூட்டத்தில் பேசுவது என்பது மட்டும் அல்ல. நண்பர்கள் மத்தியில், குடும்பத்தினர் மத்தியில் பேசுவதும் பேச்சுதான். எனவே அதிலும் கவனம் தேவை.
பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம் என்று சொல்வார்கள். மகான்கள் எல்லாம் தேவைக்கு மட்டும்தான் பேசுவார்கள். மற்றநேரங்களில் மவுனமாக இருப்பதையே விரும்புவார்கள். தேவையினை கருதி மிக ரத்தின சுருக்கமாக பேசுவார்கள்.
சில நேரங்களில் பேசாமல் அமைதியாக இருந்து விடுதல் பேச்சைக் காட்டிலும் ஆற்றல் மிக்கது ஆகும். ஒரு சொல் போதுமான இடத்தில் இரு சொற்களைச் செலவு செய்யத் தேவை யில்லை. மௌனம் அழகான மொழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’. ‘தானத்தில் சிறந்தது நிதானம்என்பார்கள். நிதானப் பேச்சானது பேசுபவர், கேட்பவர் ஆகிய இருவருக்கும் நன்மைகளை உண்டாக்கும். குழப்பம் இருக்காது. அது அறிவை வளர்க்கும், அத்துடன் அறிவையும் பெருக்கும்.
போராட்டங்களும், வன்முறைகளும் மிகுந்து விட்ட இந்தக் காலத்தில் மனங்களை இணைக்கப் பாலமாக பேச்சு விளங்குகிறது. இனிமையான பேச்சு வாழ்வில் மேன்மையைத் தரும். யாரையும் தரக் குறைவாகப் பேசக்கூடாது. கனிவாகப் பேசினால் காரியம் கைகூடும். கருணையுடனும் பேசினால் கடவுள் கை கொடுப்பார்.
மென்மையான பேச்சு மேன்மைதரும், தெளிவான பேச்சு சிறப்பைத் தரும், அன்பான பேச்சு அழியாப் புகழைத் தரும். அடுத்தவர் பேச வாய்ப்பளித்துப் பேசுங்கள். உங்கள் மதிப்பு ஒருபடி உயரும், பயமின்றிப் பேசுங்கள் தெளிவான சிந்தனை பிறக்கும், கனிவாகப் பேசுங்கள்காரியம் கைகூடும். இனிமையாகப் பேசுங்கள்பிறர் மனம்
உங்கள் வசப்படும். வெற்றி உங்கள் பேச்சில்தான் ஒளிந்திருக்கிறது

                                                  ---நன்றி---