சிந்தனை செய் மனமே

சிந்தனை இன்றிய இடைவெளியை
நினைவுகள் வந்து நிரப்பி விடும்
சிந்தனை செய் மனமே
சீராக நல்லவண்ணம் வாழலாம்
நித்தம் மனம் துன்பத்தில்
நீள்கின்ற போதெல்லாம்
அஞ்சுகின்றன மனங்கள்
அடிசாய்ந்து விழுந்துவிடும்
சிந்தனை செய் மனமே
துன்பபொழுதுகள் சூழ
அமைதி இழந்து
அல்லல்படுவதிலும் காட்டிலும்
சிந்தனை சிறகுகளால்
எண்ணத்தை மாற்றிவிடு
மலர்ந்துவந்துவிடும் இனியபொழுதுகள்
சிந்தனை செய் மனமே

🖆🖆🖆காலையடி,அகிலன் ராஜா🖆🖆🖆


No comments:

Post a Comment