அழியும் உடல் ''மெய்'' எனப்படுவது எப்படி?

உடலுடன் பிறந்த உயிரினங்களுக்கெல்லாம் மரணம் உண்டு என்பது யாவரும் அறிந்த உண்மை. மரணம் என்பது அழியாத உயிராகிய ஆன்மாவின் விலகலுடன் ,உடல் அழிவதுடன் நிறைவடைகிறது. அப்படியாயின் அழியும் உடலுக்கு மெய் எனும் பெயர் எப்படி வந்தது?

நாம் மின்சாரத்தினை காண்பதற்குமுன், அல்லது மின்சாரம் இல்லாத  வீடுகளில் கையில் எடுத்துக் கொள்ளக்கூடிய விளக்கினை பாவிப்பதனை மறக்கமுடியாதுஒளி கொண்டு விளக்கி இருளை அகற்றுவதால் அதற்கு  விளக்கு என பெயர் வந்தது எனலாம். ஆனால் ஒளியினைத் தந்தது நாம் கையில் எடுத்துக்கொள்ளும் எண்ணெயினை தாங்கி நிற்கும் கலம் அல்ல. அதில் ஏற்றப்பட்டிருக்கும் தீ என்பது யாவரும் அறிந்ததே.இருந்தாலும் விளக்கு என்றே அதனைக் கூறுகிறோம். இதையே தமிழ் இலக்கணத்தில் ஆகுபெயர் என்பர்.

தீயினை தாங்கி நிற்கும் ஒளி தராத கலம் எப்படி விளக்கு எனப் பெயர்கொண்டதோ அவ்வாறே மெய்யான உயிரைத் தாங்கி நிற்கும் ,பொய்யான உடல் மெய் எனப் பெயர் பெற்றது.

👨👨👨👨👨நன்றி-சொல்வேந்தர்,சுகி-சிவம் 👨👨👨👨👨

No comments:

Post a Comment