கொடைக்கானல் [Kodaikanal], இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடைக்கானல் வட்டம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2018-ஆம் ஆண்டு பூத்தன.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது.
கொடைக்கானல் நிலவமைப்பு
சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும். அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவேட்டுவன் இவர் கொங்கு வேட்டுவக்கவுண்டர் இனத்தை சார்ந்தவர் ஆவார். பண்ணி என்பவன் இந்த நாட்டைத் தாக்கி வென்று வேள்வி செய்தான்.
காலநிலை
கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 11.3 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்.
வரலாறு
1821இல் லெப்டினன்ட் பி. ச. வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,442 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 36,501 ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 48.84%, இசுலாமியர்கள் 12%, கிறித்தவர்கள் 38.69% மற்றும் பிறர் 0.43% ஆகவுள்ளனர்.
அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள்
மதுரை 135 கிலோமீட்டர்
கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
திருச்சி 195 கிலோமீட்டர்
சென்னை 465 கிலோமீட்டர்
தூத்துக்குடி 262 கிலோமீட்டா்
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
⇰கொடைக்கானல் ஏரியில் படகு
⇰குறிஞ்சி ஆண்டவர் கோயில்
⇰கொடைக்கானல் வீதி உணவு
⇰பிரையண்ட் பார்க்
⇰தொலைநோக்கிக் காப்பகம்
⇰மற்றும் கோக்கர்ஸ் வாக்
⇰தூண் பாறைகள்
⇰கொடைக்கானல் ஏரி
⇰பேரிஜம் ஏரி
⇰கவர்னர் தூண்
⇰கோக்கர்ஸ் வாக்
⇰அப்பர் லெக்
⇰குணா குகைகள்
⇰தொப்பித் தூக்கிப் பாறைகள்
⇰மதி கெட்டான் சோலை
⇰செண்பகனூர் அருங்காட்சியம்
⇰500 வருட மரம்
⇰டால்பின் னொஸ் பாறை
⇰பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
⇰பியர் சோலா நீர்வீழ்ச்சி
⇰அமைதி பள்ளத்தாக்கு
⇰குறிஞ்சி ஆண்டவர் கோயில்
⇰செட்டியார் பூங்கா
⇰படகுத் துறை
⇰வெள்ளி நீர்வீழ்ச்சி
⇰கால்ஃப் மைதானம்
கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
கொடைக்கானலில் கிராமங்கள் அதிகமாக இருக்கின்றன.
தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்
No comments:
Post a Comment