அன்று அந்நியரின் பிடியில்
நாடு இருந்தகாலம் .பாரதி என்றொரு பாவலன் அணியருக்கெதிராகப்
பாட்டினால் படையெடுத்த நேரம்.பாரதியின் வித்தியாசமான கண்ணோக்கில் எழுந்த பாடல்கள் பல்வேறு
விமர்சனங்களுக்குள்ளானது.
பாரதியார் பரம்பரை பரம்பரையாக பாடி வரும் முறைப்படி பாட மறுக்கிறார்.அவர் இஷ்டத்துக்கு பாடுறார். புதுசு புதுசாய் விஷயங்களை மாற்றுகிறார்.அரசரை புகழ்ந்து பாடமறுக்கிறார். ஒலி , அமைப்பு, மெட்டு எல்லாவற்றையும் மாற்றுகிறார். மனதில் தோன்றியபடி எல்லாம் எழுதுகிறார் .பாரதியின் கவிதைகள் பாமரத் தனமானது என்று குற்றம் சாட்டினார்கள். பாரதியின் கவிதைகள் அன்றய சூழலுக்கு ஏற்றவை இல்லை என்று வாதாடினார்கள்.
அடுத்தவர்களின் ஆரோக்கியமான கருத்துகளுக்காகப் பாரதி காத்திருக்கவில்லை. எதிரான கருத்துக்களுக்காக சற்றும் மனம் உடையவில்லை.எழுதிய கைகளும் தளரவில்லை.
பாரதி ஒருவரே தன் பாடலுக்கு கருத்துக்களை முன்வைத்தார்.
''என் பாடலின் சொல் புதிது. பொருள் புதிது. சுவை புதிது. சோதிமிக்க நவ கவிதை என் கவிதை. நாளும் அழியாத நவ கவிதை என் கவிதை.கவியரசர் தமிழ் நாட்டுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது'' என்று துணிவோடு கூறினார்.
ஒருமுறை 'சர்கஸ்'நிலையத்திற்கு மனைவி செல்லம்மா வுடன் சென்ற பாரதி அங்கு உள்ளே நின்ற சிங்கத்தை பார்க்க சென்ற போது வாயில் காப்போன் தடுத்தான்.அதற்கு அவர் ''காட்டுக்கு அரசன் சிங்கமும் ,பாட்டுக்கு அரசன் பாரதியும் சந்தித்துக் கொள்வதில் என்ன தப்பு என அவனிடம் கேட் டாராம். '' என பின்னர் எழுதிய நூலில் மனைவி செல்லம்மா குறிப்பிட்டுள்ளார்.
பாரதியின் இறுதி ஊர்வலத்தின்போதுகூட அவன் உடம்பில் மொய்த்த ஈக்களை விட [20லும்] குறைவானவர்களே கலந்துகொண்டார்கள் என கவிஞர் வைரமுத்து பாரதிக்குரிய 'கவிராஜன் கதை' எனும் நூலில் வேதனை கொள்கிறார்.
ஆனால் அன்று பாரதியாரைப் பற்றி அனைவரும் கொண்டிருந்த அபிப்பிராயம் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது. ஆனால் அன்று பாரதிமட்டும் தன்னைப்பற்றி கொண்டிருந்த அபிப்பிராயம் இன்று நிலைத்துவிட்டது. பாரதியார்வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
நன்றி;ஐயா சுகி-சிவம்[suki sivam ]
0 comments:
Post a Comment