மனிதனுக்கு எதிரியாக மனிதக் குண்டுகள்

இலங்கை நாட்டில் மனிதரை அழிக்கப் பாய்ந்த குண்டுதாரிகள் நம் உள்ளத்தில் கொடுத்த காயங்கள் ஆற முடியாதவை.ஆற்றவும் முடியாதவை.

 மேற்படி சம்பவத்திற்குச்சில நாட்களின் முன்   Theebam.com: பாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் எனும் தலைப்பில் ஒரு கட்டுரையினை வெளியிட்டிருந்தோம்.உலகில் மனிதர்கள் கூறும் கற்பனைக் கடவுளினை சாட்டி தன்னையே  மனிதன்   அழிப்பதனையே ஒரு சம்பவம் மூலம் வெளிப்படுத்தி இருந்தோம்.
பெரியாரும் சில வருடங்களுக்குமுன் 
''அடேகண்ணில் காணாத  உங்கள் கடவுளைப் பற்றி எதோ எல்லாம் கூறுகிறீர்கள், கண் முன்னால் இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால் ஒன்றும் தெரியாது என்கிறீர்கள்'' என்று கவலைப்பட்டுக்கொண்டார்.
எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன என அழகழகாய் கூறும் அத்தனை மதவாதிகளும் மக்களைப் பகடைக்காய்களாக வைத்து தம் விருப்பங்களை ,தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்பவர்களாகவே இருக்கின்றனர். மக்களும் அவர்கள் கூறும் விளக்கங்களுக்கெல்லாம் ஆமாப் போடும் தலையாட்டிப் பொம்மைகளாகவே வாழ்கின்றனர். இன்னும் எத்தனை பெரியார்கள் வாழ்ந்தாலும் இவர்கள்  மாறப்போவது இல்லை என்பது காணக்கூடியதாகவே இருக்கிறது.
கடவுள் பால் குடிக்கிறார்,கண்ணில் இரத்தம் வருகிறது,திருநீறு பொழிகிறது என்றெல்லாம்  ஒரு மந்திரவாதி யின் செயல்களை ஒத்த விடயங்களை அவர்கள் வைத்திருக்கும் பொம்மைகளில் காட்சிப்படுத்தி அதனைஅக்கடவுளோடு  இணைத்துக்காட்டி அற்புதம், அதிசயம் என்றெல்லாம் மக்களை ஏமாற்றி திசைதிருப்பி தம் வழிப்படுத்தல் காலம்காலமாக  நடந்து வருகிறது.கடவுளின் வழிபாட்டின் அர்த்தம்/நோக்கம்  அழிக்கப்பட்டுவிட் டது.
இவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி முழு நம்பிக்கையுடன் ஆலயம் என்று சென்றவர்கள் பல் ஆலயங்களில் வைத்து  மனிதக்குண்டுகளால் சிதறடிக்கப்பட்டபோது உங்கள் அற்புதமும், அதிசயமும் எங்கே சென்றது? நீங்கள் கூறும் அந்த ஆண்டவன் எங்கே? மனிதர்கள் சிந்திப்பார்களா!
அக்குண்டு வெடிப்பில் தப்பிய ஒருவர் தான் தப்பியது ஒரு அற்புதம் என கூறும் வேளையில் அச் சம்பவத்தினால் பாதிக்கப் பட் டவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று தப்பியவர்  உணராதவகையில்  இன்று மனித நேயம் மங்கிவிட்டது.
உலகில் பல உயிரினங்கள் வாழ்கின்றன.பறவைகள்,விலங்குகள், ஊர்வன கடவுளைக் கொண்டிருக்கவில்லை, மதங்களை உருவாக்கவில்லை. இருந்தாலும் தம் இனத்தை தான் அழிக்க எண்ணியதில்லை.புலி பசித்தாலும் புலியைத் தின்னுமா?அல்லது கழுகு கழுகினை வேட்டை ஆடுமா?
ஆனால் மனிதன் மட்டும் மொழியாலும்,மதத்தாலும் பிரிந்து முட்டி மோதி  ஒருவனை ஒருவன் விழுங்க வெறிகொண்டு அலைகிறான்.
எப்படித்தான் ஆலயங்கள் இடிந்து அடியார்கள் மாண்டாலும், சன நெரிசலில் ஆலயத்தில் மக்கள் மடிந்தாலும், அன்னதான சாதம் உண்டவர்கள் மாண்டாலும்,  வழிபாட்டில் இருந்தவர்கள் குண்டு பட்டு இறந்தாலும் வழிபாட்டுத்தல உரிமையாளர்கள் கூறும் மழுப்பல் தத்துவங்கள், மக்களை மீண்டும் ஈந்த அற்புதங்களும், அதிசயங்களும் அடிமைப்படுத்தியே வைத்திருக்கும்.
மனிதகுண்டுடன் தைரியத்துடன் ஆலயத்தினுள் குதிப்பவனுக்கு இவையெல்லாம் பொய்யென்று புரிகிறது , ஆனால் மனிதர்களுக்குப் புரியவில்லையே!
சிலைகளும்,ஆலயங்களும் நன்மை  எதையும் நமக்கு அள்ளிக் கொடுக்கப்போவதில்லை.
முதலில் சீவன்களை நேசியுங்கள். அனைத்து நன்மையையும் கிடைக்கும்.  உலகம் அமைதிகொள்ளும்.
곧곧곧곧곧곧곧곧곧செ .மனுவேந்தன்.

No comments:

Post a Comment