உயிரை தின்ற தீ



பசி வந்து உணர்வை பந்தாட
உயிரை தின்ற தீ ஆனதே
என்னில் வறுமை வந்ததால்
என் துடிப்பும் நின்று விடுமோ
தினமும் வயிறுகள் யுத்தம் செய்தே
நாட்களை கழிக்கின்றதே
வாழமுடியாமல் தடுமாறிகொண்டு
போகும் வாழ்க்கையில்
என் கண்கள்
உணவு வாசலை பார்த்து
காத்து இருக்கின்றனவே
வீடு தோறும் கதவை
தட்டி பார்த்தேன்
இதயம் உள்ளவர்கள்
திறக்கவே இல்லை
உயிரை அமில வாயு
எரித்துக் கொண்டிருக்கிறது
மரணத்தை தழுவினாலும்
பார்ப்பவர்கள் நெஞ்சில்
ஈரம் வருமா அல்லது
பூமி எங்கும் வறுமை பரவிப் 
பூக்கள் பொசுங்குமோ?

🔥🔥🔥🔥🔥🔥🔥காலையடி,அகிலன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 

No comments:

Post a Comment