சிவாஜிகணேசன்
ஒரு நடிப்புச் சுரங்கம், சிவாஜி
கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக்
கழகம், சிவாஜிகணேசன்
நடிகர்களின் பிதாமகன், சிவாஜி
நடிப்புலகின் டிக்ஷனரி, தலைசிறந்த
நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி
நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும்
விதமாக தமிழ்நாட்டில் ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட
அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை. ‘அதெல்லாம்
எங்களுடைய வேலை இல்லை. அரசாங்கம்
செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று
கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.
பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம்
திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல. கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது,
சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய
அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும்
(அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான
ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது
இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு
அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள்.
(எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம்
எனக்குத் தேவையில்லை’
என்று உதறி எறிந்தது அற்புதமான
காமெடி).
மற்ற
மாநிலங்களில் முத்துராமன், ஜெய்சங்கர் அளவு நடிகர்கள் எல்லாரும்
பத்ம பூஷன், பத்ம விபூஷன் என்றெல்லாம்
முன்னேறிக்கொண்டிருக்க சாதாரண பத்மஸ்ரீக்கே பல ஆண்டுக்காலம் காத்துக்கிடக்க
வேண்டியிருந்தது சிவாஜிகணேசனால்.
தமிழகத்தைப் பல ஆண்டுக்காலம் ஆட்சி
செய்யும் வாய்ப்புப் பெற்ற கலைஞர், சிவாஜி என்ற மகா கலைஞனுக்கும்
கவியரசர் கண்ணதாசனுக்கும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிக அரிய கலைஞர்கள்
என்ற வகையில் எவ்வித அரசு மரியாதைகளையும் செய்யவில்லை
என்பது கசப்பான உண்மை.
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥தகவல்:அகிலா,பரந்தாமன்
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥தகவல்:அகிலா,பரந்தாமன்
0 comments:
Post a Comment