எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [பொள்ளாச்சி]போலாகுமா?

பொள்ளாச்சி (Pollachi)

பொள்ளாச்சி (Pollachi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்
'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.பழம்பெரும் சிறப்புகளைக் கொண்டது இந்த பொள்ளாச்சி.

முக்கிய நபர்கள்
மயில்சாமி அண்ணாதுரை[வானியல் விஞ்ஞானி]
நா. மகாலிங்கம்[தொழிலதிபர்,அரசியல்வாதி, சமூக சேவையாளர்]

சி.சுப்பிரமணியம்[அரசியலில் பணி]
சிற்பி பாலசுப்பிரமணியம்[பேராசிரியர்,பல்துறை அறிஞர்]

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ஆனைமலை
ஆழியாறு அணை
குரங்கு நீர்வீழ்ச்சி
டாப் ஸ்லிப்
இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்
வால்பாறை

மாட்டுச் சந்தை
பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருள்களுக்குச் சிறப்புப் பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்தச் சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காகக் கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்தச் சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது.

திரைப்பட படப்பிடிப்புகள்
பொள்ளச்சி தமிழ்த் திரையுலகின் பிரபல திரைப்படப் படப்பிடிப்பு தளமாக விளங்குகிறது. இதற்கு, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கையின் அழகும் சிறப்பான தட்பவெட்ப நிலையும் காரணமாக அமைகின்றன. வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படம்பிடிப்பதை விட, மிக மிகக் குறைவான செலவிலேயே இங்கே படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்பது பொள்ளாச்சியின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

தென்னை பொருட்கள்
பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் பதனி இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது.

சுற்றுலாத் தலங்கள்
தென்னை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய்ப் பொருள்களுக்குப் பெயர் பெற்றுக் காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்தப் பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. பொள்ளச்சியின் அருகே இருக்கும் பெரிய அணைக்கட்டுகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவருகிறது.

கலைகள்
சிக்காட்டம் எனும் கலை சிறப்புமிக்கதாகும்.இந்த கலைக்குழுக்கள் பொள்ளாசசி பகுதிகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடையது.

 𒊥𒊥𒊥தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன் 𒊥𒊥𒊥

No comments:

Post a Comment