விமர்சனங்கள் மலிந்துவிடட காலம் இது. இதிலும் ஒவ்வொரு செயலுக்கும் அடுத்தவர் என்ன சொல்வார், அடுத்தவர் கருத்து என்ன என்று மனிதன் ஆவலுடன் காத்திருக்கும் காலம் இது.
அழகாக வெளிக்கிட்டு வரும் ஒரு இளைஞனைப்
பார்த்து ஒருவன் 'அட
விஜய் மாதிரிக் கலக்கிறாய் என்று கூறினால்
அவனும் மகிழ்ச்சி அடைகிறான். அதேபோலவே பெண்ணைப்பார்த்தது ரம்பா போல் இருக்கிறாய் என்று கூறினால் அவளும்
மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் நான் என்னைப்போல் இருக்கிறேன் என்று சொல்ல யாரும் துணிவதில்லையே
நான் சிவாஜிகணேசன் போல் நடிப்பேன் என்று ரஜனி அல்லது
கமலஹாசன் நடிக்க ஆரம்பித்திருந்தால் என்றோ அவர்கள்
அடையாளம் தெரியாமல் போயிருப்பார்கள். ரஜனி ரஜனியாகவே நடித்தார்,கமல் கமலாகவே நடித்தார் ஆதலால் அவர்கள் ,முன்னுக்கு வந்தனர்.
அதேவேளை வளர்ந்துகொண்டிருந்த நடிகர் ராமராஜன் பின்னால் எம்.ஜி.ஆர் போன்று நடிக்க ஆரம்பித்து திரையுலகிலிருந்து
காணாமல் போனது நீங்கள் அறியாததா?
உனக்குள்ளேயும் எதோ சில திறமைகள் ஒழிந்திருக்கின்றன என்பதனை உணராது திறமையினை வெளிப்படுத்திய அடுத்தவர்களை ஒப்பிட்டு உன்னில்
பேசுவது உனக்கு அவமானமாகத் தெரியவில்லையா?
நீ,நீயாக இருந்தால் தான் பெருமை என்பதனை உணராது
யாரோ போல் இருப்பதாக ஒருவன் கூறி ,சொல்லிப் பெருமைப்படக் கூடியதாக உன்னிடம் சொந்தமாக எதுவும் இல்லை என மறைமுகமாக அவன் உன்னை கேலி பண்ணுவதுபோல் உனக்குத் தெரியவில்லையே இது எவ்வளவு வெட்கக்கேடு!
[ சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தொகுப்பு :செ.மனுவேந்தன் ] suki sivam
No comments:
Post a Comment