நமது
கலாச்சாரத்தில் விளக்கேற்றினால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம்.விளையாட்டுப் போட்டி என்றால் மண்ணைத்தொட்டு வணங்கி மைதானத்தில் நுழைகிறோம்.ஈசாவில் உணவு அருந்துவதற்கு முன் படல் பாடி பிரகீர்த்தனை செய்துவிட்டு உணவு அருந்துகிறோம்.
அது
ஒரு பிராத்தனை அல்ல.எமது கலாச்சாரத்தில் பிராத்தனை என்பது முன்னர் இருந்ததில்லை. வெளியிலிருந்து வந்த மதங்களில் இருந்த அப்பழக்கத்தினைப் பார்த்து நாம் பின் தங்கி உள்ளோமோ என்றெண்ணி நாமே அவற்றினை உண்டாக்கிக் கொண்டோம். உண்மையில் கோவில்கள் கூட பிராத்தனைக்குரிய இடமாக இருந்ததில்லை.சக்தியை தேக்கி வைக்கும் இடமாகத்தான் அது இருந்திருக்கிறது.
உணவு
அருந்துவதற்கு முன்னரோ அல்லது யோகப்பயிற்சிகள் செய்வதற்கு முன்னரோ நாம் அப்படி உச்சரிப்பதன் மூலம் நம்மை நாமே ஒரு குறிப்பிட்ட தன்மைக்காக தயார் செய்து கொள்கிறோம். நம்முள் உள்ள சிறந்த ஏற்றுக்கொள்ளும் தன்மையினை வெளிக்கொணர அது உதவுகிறது.எனவே அவை கடவுளுக்காகப் பாடப்படுவதில்லை.
உங்களுக்காக கடவுள் உணவு எதுவும் தயார் செய்து தருவதில்லை.அவ் உணவு கிடைக்க இங்குள்ள மக்கள் தான் காரணம்.நீங்கள் கூறும்,மனித உருவிலான கடவுளை நீங்கள் பார்த்ததே இல்லை. உங்களை வாழ வைக்கும் கடவுள் உண்மையில் உணவுதான்.எனவேதான் நாம் இதை அன்னபூரணி என்கிறோம்.அதற்காக எங்கோ உட்கார்ந்துகொண்டு ஒரு தேவதை எமக்கு உணவு தருகிறாள் என்பதல்ல.நம் உணவையே தேவதையாக மதிக்கிறோம்.உங்கள் அனுபவத்தில் நீங்கள் சுவாசிக்கும் காற்று,நீங்கள் நடக்கும் நிலம்,நீங்கள் உண்ணும் உணவு இவை தான் உண்மையான கடவுள்கள்.இந்தக் கடவுள்கள் தான் ஒவ்வொரு கணமும் உங்களை உயிருடன் வைத்திருக்கிறது.இதை நீங்கள் புரிந்துகொள்ளும் போது ஆழமான அன்போடும் மிக நன்றியுணர்வோடும் உணவருந்த ஆரம்பிப்பீர்கள்.உணவை வீண் செய்யவும் மாட்டீர்கள்.எனவே நீங்கள் குறிப்பிடும் செயல்களுக்கும்,பிராத்தனைகளுக்கும்
எந்த சம்பந்தமுமில்லை.குறிப்ப்பிட்ட ஒரு தன்மையினை நமக்குள் கொண்டு வருவதற்காகத்தான் நாம் அதுபோன்று செய்கிறோம்.நமது ஆன்மீக வளர்ச்சி கூட அந்த தன்மையினை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது.
-
சத்குரு ஜக்கி வாசுதேவ்
தேர் செய்து கொடுத்தா எம் தேவை எல்லாம் தீர்ப்பான் முருகன் என்று தம் பெற்றோரின் தேவைகளை மறந்து முருகனுக்கு தேர் செய்து கொடுத்தவர்களும் உண்டு.
ReplyDelete