வாழ்க்கை ஒரு விளையாட்டு …!!


பிராத்தனை என்றால் என்ன?இது கொடு,காப்பாற்று என்பதா?நீங்கள் மனித மனம் லாவகமாக கையாளப்பட வேண்டிய கருவி. சரியான எண்ணங் களை அதில் புகுத்தினால் ஒழிய அதனை முறையாக இயக்க முடியாது. இன்று நம்மில் பெரும்பாலான வர்கள் வாழ்வில் விலக்க வேண்டிய விஷயங் களையே திரும்பத் திரும்ப சிந்தித் துக் கொண்டிருக்கும் தவறைச் செய்கிறார்கள். தேவையான எண்ணங்கள் மனதில் புகத் தொடங்கினால், தேவையில்லாதவை தானாகவே விலகி விடைபெற்றுவிடும்.

மனதை, மின்சார சாதனங்களைப் போல தேவைப்பட்டால் இயக்கவும், இல்லையென்றால் நிறுத்தவும் முடியும். ஆனால், அந்த அளவுக்கு ஆளுமைப்பண்பு நம்மிடம் இருக்கவேண்டியது அவசியம்.

பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்பார்ப்பது போல, உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று சிலர் ஜோதிடத்தை நம்பி காத்திருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் அமைக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால், உங்களை எப்படி வடிவமைக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கை, இந்த சமூகத்தின் வாழ்க்கை அனைத்துமே அமையப் போகிறது.

மனிதன் தன் கையில் எதுவும் இல்லை என்று ஏங்கிக் கொண்டு இருந்தால் ஒரு பயனும் விளையாது. நம்மிடம் இருப்பதை சிறப்பாக பயன்படுத்தத் தொடங்குவதே வெற்றிக்கான வழியாகும்.

எந்த ஒன்றையும் பதட்டத்தோடு அணுகும் போது நம்முடைய மன ஆற்றல் குறைந்து விடும். செயல்திறன் மங்கிவிடும். ஆனால், நிதான புத்தியுடன் செய்யும்போது சிறப்பாக செய்ய முடியும்.

வாழ்க்கையோடு நாம் விளையாடவேண்டுமே ஒழிய, வாழ்க்கை நம்மோடு விளையாட அனுமதிக்கக் கூடாது. முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் இது சாத்தியமான ஒன்று தான்.

வேண்டும் வேண்டாம் என்ற எதிர்பார்ப்புகளே எந்த ஒரு விஷயத்திலும் ஏமாற்றத்தை உண்டாக்குகின்றன. வாழ்க்கையை அதன் இயல்போடு முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது, மகிழ்ச்சிக்குறைவு உண்டாகாது
 - ஜக்கி சற்குரு வாசுதேவ்

No comments:

Post a Comment