வழித்துணையாக வாராயோ வெண்ணிலவே!
வாழ்வின் கனவுகள் எப்பொழுது நனவாகும்?
வாழ்வதனின் மொழி புரியாமல்
வார்த்தைகள் கூட மௌனமாகி போகிறதே!
பகல்தன்னில் வருவாய்
பாசம் வைப்பாயென
பாவை போல காத்திருக்க,
மாயையில் வாழ விருப்பம்கொண்டு
இரவின் இருளில் உறங்கி
இருட்டினிலே மயங்கி போகிறாய்!
காலியான வாழ்வு தன்னில்
காலங்கள் கருக்கொள்ள மறுத்தால்
காய்ந்து போவது வாழ்வுதானே,
கற்பனைகள் அலைமோதி
காதலில் இசைபாடி
காலமெல்லாம் இன்பமாக வாழ்ந்திடவே
வழித்துணையாக
வாராயோ வெண்ணிலவே!
⇚⇚⇚⇚⇚காலையடி,அகிலன் ⇛⇛⇛⇛⇛
No comments:
Post a Comment