சைவ மக்கள் மீள்வது எப்படி?

இன்று பலவித வழிபாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு எம்மத்தியில் மலிந்து காணப்படுகின்றன.அவைகள் மனித ஈடேற்றத்திற்கு வழிகாட்டவில்லை. பதிலாக  இன்று இலங்கை ,இந்தியாவில்  மக்கள் மத்தியில் அருவருப்பான வன் முறைச் சம்பவங்களுக்கு துணிச்சலை  வகுத்துக் கொடுத்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மைகளாகும்.
அன்று சித்தர்கள் கூறிய ஆன் மீ கக் கருத்துக்கள்ஆரியரின் ஆட் சியில்    இருட்டடிக்கப்பட்டு , கொச்சைத் தனமான புனை கதைகள் மூலம் மக்கள் திசை திருப்பப்பட் டதன் விளைவே இன்றய இந்த நிலைமைகளாகும்.
சித்தர்களில்  இங்கு திருமூலர் கூறிய திருமந்திரம் பாடல் எண் 1823 இல்

உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே

 எனக் கூறுகிறார்.

திருமூலர் பாடல்களிலிருந்து நாம் அறியக்கூடியதாக உள்ளவை பின்வருமாறு

1.இறைவன் எல்லோரிடமும் உள்ளான். ஆகவே எல்லோரையும் நல்ல ஆத்மாவாகக் காண வேண்டும்

2.நாமே இறைவன்; அஹம் பிரம்மாஸ்மிஎன்னும் உபநிஷத் கருத்து. எல்லோரிடமும் இறைவன் இருக்கிறான். அவனைக் காணும் பக்குவம்நமக்கு வேண்டும்.

3.மூன்றாவது பொருள்- இறைவனைத் தேடி ஆறு, கடல், கோயில், குளம், மலை, காடு என்று யாத்திரை போக வேண்டிய அவசியமில்லை அவனை உள்ளத்தில் பார்க்கத் தெரிந்து கொள்வதே உண்மை.

நாலாவது பொருள்இறைவனை உணர வேண்டுமானால், உடலைச் சரிவரப் பாதுகாக்கவேண்டும். பலவீனனால் ஆத்மாவை உண்ர முடியாது.
இதுபோன்ற  சித்தர்களின் பயனுள்ள சிந்தனைகள் மனிதனிடம் விதைக்கப்பட்டிருந்தால் இன்று காணப்படும் மனித வதைகளோ , பெண்கள்,குழந்தைகள் மீதான காமவெறியாட் டங்களோ காணப்பட வாய்ப்புக்கள் வெகுவாக குறைந்திருக்கும்.
நோக்கங்கள் நற்சிந்தனைகள் எதுவுமற்ற வெறுமையான தற்கால வழிபாடுகள் மேலும் மனிதகுலத்தை அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும். சென்றுகொண்டிருக்கிறது.
㊪㊪㊪㊪㊪㊪தொகுப்பு:செ.மனுவேந்தன்.㊪㊪㊪㊪㊪㊪

No comments:

Post a Comment