என் வாழ்வுதான் இப்படி அமைந்துவிட்டது. எனக்குத்தான் வந்த கணவன் சரியில்லை. எனக்குத்தான் வந்த மனைவி சரியில்லை என்று எங்கும் பலரை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கிறது. இது ஒரு நல்ல சிந்தனையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. இப்படியான சிந்தனைகளே அழகிய வாழ்வினையும் சிதைக்க வல்லது.
ஏனெனில் இன்று அடுத்தவரை பார்த்து எங்கும் நாம் ,அடுத்தவர் வீட்டுக்குள் என்ன உங்களுக்கு விரும்பத்தகாதவைகள் பொலிந்து கிடக்கின்றது என்று அறியாமலே ஏங்குகிறோம். அவர்கள் வெளியில் காட்டும் நடிப்பினைப் பார்த்து ஏமாறுகிறோம்.
அதற்காக அந்த நடிப்பினை தவறாக நாம் கூறவில்லை. ஒவ்வொரு மனிதரின் சிந்தனைகள்,கருத்துக்கள், இரசனைகள் ,நோக்கங்கள் ,நடவடிக்கைகள் ,அணுகுமுறைகள் வெவ்வேறானவை. அது குடும்பத்தில் ஒருவர் மேல் ஒருவருக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம்.வேறுபாடுகள் இருந்தாலும் , அப்படித்தான் என் மனைவி/கணவன் என்று கருதி புரிந்து கொண்டு வாழ்ந்தால் பிரச்சனைக்கே குடும்பத்தில் இடமில்லை. வெளியில் தன மனைவியை செல்லமே என்று அழைப்பவன் வீட்டில் அப்படி அழைப்பான் என்று எதிர்பார்க்கமுடியாது. வீட்டுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடுகளை வெளியில் காட்டிக்கொள்ளாது ,வாழ்வதினாலேயே பல குடும்பங்கள் இல்லறத்தினை இனிதாக நிறைவேற்றி அதன் பலனாக தம் பிள்ளைகளையும் நல்ல நிலைக்குக் கொண்டுவருகின்றனர். அதுதானே வாழ்க்கை.
ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலித்தால் ,அவள் விரும்பாதபோது ,அவ் ஆணின் காதல் நிறைவேறாது. ஆனால் ஒரு பெண் காதலித்தால் அதை அவள் அடைந்தே தீருவாள்.அப்படியான மனஉறுதி கொண்ட பெண்குலத்தால் தமக்கு வரும் பிரச்சனைகள் தீர்க்கும் வல்லமையும் உண்டு. அந்த வல்லமை தம்மிடம் உண்டு என்பதனை உணராதவர்களே வீட்டுப் பிரச்சனைகளை வெளியில் எடுத்துவந்து மேலும் குழம்புகிறார்கள்.
புதிய நாடுகளில் கண்டுகொண்ட அந்த நாடுகளில் பெண்கள் பாதுகாப்பிற்காகக் காணப்படும் சட்டங்களை தவறானமுறையில் நம்மவர் கையில் எடுத்து தம் வாழ்வினையும்,குழந்தைகளின் எதிர்காலத்தினையும் பாழடிப்பதுசம்பந்தப்பட்ட இருவருக்கும் மேலும் கவலைகளையே கொடுக்குமல்லாது.ஒருபோதும் அது வாழ்க்கையுமாகாது.
தொகுப்பு:செ . மனுவேந்தன்
0 comments:
Post a Comment