கடவுளுக்கு செய்வதற்கு...


 சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் உரையினைத் தழுவித் தொகுக்கப்பட் டது.
மக்கள் சேவை மகேசன் சேவை என்ற  வாசகத்தினை ஆலயங்களும்ஆன்மீகவாதிகள் எனத் தம்மை எண்ணிக்கொண்டு வாழ்வோர் பலரும் ,  அதனை ஒதுக்கி அழித்து பல்லாண்டுகளாகிவிட்டது.
 இது தொடர்பாகச் சொல்வேந்தர் கூறுகையில்... 
அனைத்தினையும் படைத்தவன் கடவுள் என்று சொல்கிறீர்கள். அவன் படைத்திருந்தால் படைத்த படைப்பை படைத்ததுபோல் காக்கும் கடமையும் அக்கடவுளுக்கு உண்டு. நீ ஒரு கண் இல்லாதவனுக்கோ, கால் இல்லாதவனுக்கோ 
உதவி செய்யும்போதுதான் இறைவன் மகிழ்கிறானே  அன்றி , நீ கடவுளுக்கென்று கொடுக்கும் பணத்தினால் அல்ல

நீ மனிதனுக்கு செய்யும் நன்மைகளையே கடவுள் வரவு வைக்கிறான். அதை விடுத்து கடவுளுக்கென்று திருப்பதிக்கு சொத்தினை எழுதி வைத்தால், கடவுள் நேரில் வந்து பணத்தினை எடுக்கப்போகிறாரா? அல்லது  அனைத்தினையும் படைத்த கடவுளுக்கு உன் பணத்தினைக்  கண்டு அவன்  மகிழ்வதற்கு, உன் பணம் அவனுக்கு ஒரு பொருளா? 
யாருமே தொடமுடியாத வகையில், கோவில்களில் கோடிக்கணக்கான பெறுமதியில் பணம் இருக்க எத்தனையோ ஏழைகள், சுவாமிக்கு எவ்வளவோ பால் முழுக்கு நடக்க எத்தனையோ குழந்தைகள் பட்டினியால் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 மக்கள் சமய அறிவு பெற்றுவிட் டால் தங்கள் பிழைப்புக் கெட்டுவிடும் என்று மக்களை மேலும் மேலும் முட் டாளாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள் இந்தநாட்டு மதத் தலைவர்கள்.
வீதியில் உறங்கும் ஏழைகளுக்கும்இறந்துகொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் கோவில் பணமும் , பொருளும்   பயன்படுமாயின் நிச்சயம் அதுவே கடவுளுக்கு செய்யும் சேவையாகக் கருதப்படுவதோடு, நாடும் விருத்திபெறும்.

 🏘🏘🏘🏘🏘🏘🏘 தொகுப்பு:மனுவேந்தன்,செ 🏘🏘🏘🏘🏘🏘🏘


No comments:

Post a Comment