கண்ணில்லாதவர்......

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்
போற்றுதற்குரிய கல்வியைப்பெறாமல்
வீணாக இருந்தோர்பேறிழந்தாரே!

பின்னாலே வரும் பெரும்துயரை
நெஞ்சுக்குள்ளே பொதிசுமந்து,
வாழ்வெல்லாம் வலி காயங்கள் காண
வறுமைகள் வந்து தீ மூட்டி கொள்ள,
வழி தெரியாமல் வதைபட்டு
கண்ணில்லாதவர் போல வாழ்வு போக
காற்றுள்ளபோதே
தூற்றிக் கொள்ளவில்லையே என.
இளமையின் எண்ணங்கள்
மனத்தின்கண் சென்று தாக்கிவிடவே,
கல்லாதவர்
கண்ணில்லாதவர் தானே என
காலங் கடந்தபின் 
அறிவை அளித்து
என்ன பயன்?

✎✎✎✎✎-காலையடி,அகிலன்-

0 comments:

Post a Comment