கீர்த்தி சுரேஷ்
ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு
உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர்,
2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி
மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம்
பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
1980 முதல் 1986 ஆண்டுகள் வரையிலான குறுகிய காலங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் பாட்டி ஈ. வி. சரோஜாவும் எம்ஜிர் ,சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரு பழம்பெரும் தென்னிந்திய கதைநாயகி நடிகை ஆவார்.
1980 முதல் 1986 ஆண்டுகள் வரையிலான குறுகிய காலங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் பாட்டி ஈ. வி. சரோஜாவும் எம்ஜிர் ,சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரு பழம்பெரும் தென்னிந்திய கதைநாயகி நடிகை ஆவார்.
வாழ்க்கைக்
குறிப்பு
கீர்த்தி சுரேஷ் 1992,
அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம்,
திருவனந்தபுரத்தில் உள்ள கென்டிரியா வித்யாலயா
பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
திரை வாழ்க்கை
தற்போது கீர்த்தி சுரேஷ்,''மகாநதி'' மற்றும் விஜய் 62 படத்தில்
விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் சாமி ஸ்கொயா். சாமி
படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தின் டீசா் சமீபத்தில் வெளியானது
நடித்த திரைப்படங்கள்
சிறந்த அறிமுக
நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி (2014)
சிறந்த அறிமுக
நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014)
சிறந்த அறிமுக
நடிகைக்கான நானா திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014)
சிறந்த துணை
நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர்.
தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்
No comments:
Post a Comment