எனது பார்வையில்,சிவன் உறையும் திருக்கைலாயம்...........
சிவனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ளது. மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய சிந்து வெளி நாகரிகத்தில் மேற்கொள்ளப் பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் சிவ வழிபாட்டின் மூலத்தை அல்லது ஆரம்பத்தை அங்கு கண்ட சிவ லிங்கம் மற்றும் பசுபதி முத்திரை [Shiva Lingam.& The Pashupati Seal]
போன்ற சாட்சிகளுடன் நிறுவியுள்ளனர். இந்த நாகரிகம் சிந்து நதியின் கரையோரம் காணப்படுகிறது. இந்த நதி, இமய மலைத் தொடரில், கைலை மலை என்ற ஒரு மலை முடியில் இருந்து உற்பத்தியாகி அங்கு ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவாவை
வழிபடும் சிந்து வெளி நாகரிகம் இன்றைய வடகிழக்கு ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் மற்றும் வட மேற்கு இந்தியாவிலும் உள்ளது [northeast Afghanistan,Pakistan and
northwest India ]. இதில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இரண்டிலும் இன்று இந்து அல்லது சைவ சமயம் இல்லை என்றே சொல்லலாம் ?. காரணம் புத்தமதம், இஸ்லாம், கிறித்துவம் [Buddhism, Islam, Christianity] போன்றவை அதன் பின் தோன்றி பரவியதாலாகும். அவை சில சில இடங்களில் முன்னைய மதத்தை அழித்து காலூன்றி இன்று அங்கு நிலைத்து விட்டன. அதே போல இன்றைய எல்லைகளும் பிற்காலத்தில் வகுக்கப் பட்டவையே ஆகும் ?
வெள்ளையின மக்கள், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களில் ஒரு பிரிவினர் ஐரோப்பாவிலும், மறு பிரிவினர் ஈரான் வழியாக இந்தியாவை கி மு 2200-1500 அளவில் வந்தடைந்தனர் என்றும் இன்று அறிகிறோம். இவர்கள் கி மு 2700-2400 ஆண்டு அளவில் உச்சத்தில் இருந்த திராவிட [தமிழ்] மக்களின் சிந்து வெளி நாகரிகத்தை வென்று அவர்களை தென் இந்தியா நோக்கி தள்ளினார்கள். பின் கங்கை நதி கரையோரம் தமது இந்து மத [வைதீக மதம்]
நாகரிகத்தை கட்டி எழுப்பினர்கள். அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். இவர்கள் வேதங்களில் காணப்பட்ட உருத்திரன் என்பவரை சிவனுடன் இணைத்து மற்றும் சில மாற்றங்கள்
செய்து தமிழரின் ஆதி சைவ மதத்தை தமது இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள் என்கிறது வரலாறு. அது மட்டும் அல்ல தமது வேத நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த கங்கையை சிவனின் முடியில் வைத்து அந்த கங்கை நதியை பெருமை படுத்தினார்கள்.
ஆறும், அதன் நீரும் மக்களிடம் கொண்டுள்ள உறவை, தொடர்பை, பண்பாட்டை, பொதுவாக எல்லா நாகரிகங்களிலும் காண்கிறோம். உதாரணமாக
"உழவர் ஓதை, மதகோதை,உடைநீர் ஓதை தண்பதங் கொள் விழவர் ஓதை, சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவிரி!" என்று சிலப்பதிகாரம் போற்றுகிறது. அது மட்டும் அல்ல காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது. ஆகவே ஆரம்ப சிவா வழிபாடடை தந்த சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்க, அமைக்க முக்கிய காரணமாக இருந்த, சிந்து நதி உற்பத்தியாகும் கைலாய மலையை தமது கடவுளான சிவனின் உறைவிடமாக கருதி அதற்கு ஒரு பெருமை சேர்த்திருக்கலாம் என ஏன் நாம் கருதக்கூடாது ?
மேலும் இன்றைய நவீன பிரதான சீனாவில் [modern mainland China] சிவ வழிபாடோ அல்லது இந்து மதமோ அல்லது சைவ மதமோ இல்லா விட்டாலும், தொல்பொருள் ஆதாரங்கள் அதற்கு மாறாக இடைக்கால சீனாவின் வெவ்வேறு மாகாணங்களில் [different provinces of medieval China]
அவை வழமையில் இருந்ததை உறுதிப் படுத்துகிறது.
-
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அப்ப சரி; இப்ப என்றாலும் எல்லாருக்கும் பக்கத்தில வந்திருந்தார் என்றால் எங்களுக்கும் வசதியாய் இருக்கும் எல்லே அருள் பெற!
ReplyDeleteகி.பி ஏழாம் நூற்றாண்டு திருநாவுக்கரசர் தனது தேவாரம் ஒன்றில்
Delete"கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே."
என்கிறார். அதாவது, கங்கை நீரில் ஆடினால் என்ன?
காவிரி நீரில் ஆடினால் என்ன? மணமும் குளுமையும் உடைய குமரியில் ஆடினால் என்ன? அலைபாயும் பெருங்கடலின் நீரில் ஆடினால் என்ன? "எல்லாவிடத்தும் ஈசன் உள்ளான்" என்றெண்ணாதவர்க்கு அது கிட்டாது என்று அழுத்தமாக சொல்கிறார்
ஆகவே ஒரு பெருமைக்காக சிவனின் உறைவிடமாக கைலாய மலையை கருதினாலும் அவர் எங்கும் உள்ளார் என்பதே உண்மை என்கிறார். நாமும் அப்படியே கருதினால் என்ன ?
கி.பி ஏழாம் நூற்றாண்டு திருநாவுக்கரசர் தனது தேவாரம் ஒன்றில்
Delete"கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே."
என்கிறார். அதாவது, கங்கை நீரில் ஆடினால் என்ன?
காவிரி நீரில் ஆடினால் என்ன? மணமும் குளுமையும் உடைய குமரியில் ஆடினால் என்ன? அலைபாயும் பெருங்கடலின் நீரில் ஆடினால் என்ன? "எல்லாவிடத்தும் ஈசன் உள்ளான்" என்றெண்ணாதவர்க்கு அது கிட்டாது என்று அழுத்தமாக சொல்கிறார்
ஆகவே ஒரு பெருமைக்காக சிவனின் உறைவிடமாக கைலாய மலையை கருதினாலும் அவர் எங்கும் உள்ளார் என்பதே உண்மை என்கிறார்.
மேலும் கி.பி. 300-500 கால பகுதியில் காரைக்கால் அம்மையார் கடவுளைப் பார்த்துக் கேட்கின்றார்:
"அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்
எவ்வுருவோ நின் உருவம் ஏது."
அதாவது எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார். சுருங்கக் கூறின் அருவமான ஒன்றே கடவுள் என்கிறார்.
எனவே அருவமான எங்கும் இருப்பவர் கடவுள் ஆகிறார், ஆகவே எல்லாருக்கும் பக்கத்தில அவர் எப்பவும் இருக்கிறார்- உங்களுக்கு வசதியாய. எனவே தேடிப்போகவேண்டிய அவசியம் இல்லை ?
பொதுவாக தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ என்பர்.எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு."அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது,எனவே நீ எல்லோரிடமும் எந்த பாகுபாடும் இன்றி அன்பு செலுத்து,அது ஒன்றே போதும் நீ எல்லா அருளும் பெற !!