யார் இந்த தம்பி ராமைய்யா ?


தம்பி ராமையா [Thampi Ramaiya Born: February 27, 1956 ] என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார்
மனுநீதி , வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் , மற்றும் கூடை முத்தம், நூறு ரூபாய், உலகம் விலைக்கு வருகுது  முதலிய  படங்களை   இவர் இயக்கி உள்ளார். இவர் மலபார் போலிஸ் ,மைனா ,கும்கி ,கழுகு ,தலைவா ,ஒஸ்தி ,வாகைசூட வா ,வேட்டை ,சிவப்பு ,யான், கேடி, பில்லா, கில்லாடி ரங்கா, கதை திரைக்கதை வசனம் இயக்கம்,
சாகசம், தொடரி ஆகிய  திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.
''மைனா'' திரை கொடுத்த விருது அவர் நடிப்பில் நகைச்சுவை,குணச்சித்திரம் என்று முன்னணி நடிகராகிவிட் டார். ஆகிவிட் டார் . 
அதேவேளை நடனத்துறையில் வல்லவரான தனது மகன் உமாபதியை[இன்னொரு மகன்:விவேகா]  நாயகனாக வைத்து அதாகப்பட்டது மகாசனங்களே, மணியார் குடும்பம் திரைப்படங்களை எடுத்திருந்தார். 'ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் கொடும் வில்லனாகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
தம்பி இராமய்யா மேடையில் அமர்ந்து வில்லுப்பாட்டு வழங்குவதில் வல்லவர். அவருக்கு இருந்த இசைத் திறமை ' மணியார் குடும்பம்' திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக உருவெடுக்க வழிவகுத்தது. தன்னைப் பற்றி ஒரு சுயசரிதையை எழுதி வெளியிட்டிருந்தார்.
பல்கலைக் திறனும் ஒருங்கே அமைந்த தம்பி ராமைய்யா திரைப்பட ரசிகர்களின் இந்த நூற்றாண்டில் சிறந்த நடிகராக போற்றப்படும் கலைஞனாகஇரசிகர்களின் நெஞ்சில் பதிவார் என்பது திண்ணம்.
📷📷📷📷📷📷📷📷📷📷📷


No comments:

Post a Comment