கோட்டைக்கல்லாறு
[KODDAIKKALLAR]
நான்கு பக்கங்களும் நீரினால் சூழப்படட அழகிய இலங்கைத் தீவில் பிரித்தாளும் தன்மையும்,பிற்போக்குச் சிந்தனையும் அதிகளவில் வேரூன்றி இருக்கிறன. இந்நாட்டினை எனக்குப் பிடிக்குமா,பிடிக்காத என்று ஒரு வரியில் இன்று உரக்கக் கூறமுடியாத ஒரு ஊமையாகவே நான் இருக்கிறேன்.
இருப்பினும் ரோஜா மலரின் இருப்பிடமே முற்செடிதானே!
அதேபோலவே இலங்கைத் தீவினில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிறிய அழகிய கிராமமான கோட்டைக் கல்லாறு தான் எனது ஊர்.
கோட்டைக்கல்லாறு
பெயரின்
சிறப்பு
இக்கிராமத்தினைச் சுற்றி ஆறும், உப்பு நீரைக் கொண்ட ஓடையில் கற்பாறையும் நிறைந்து காணப்படுவதனால் ‘கல்லாறு’ என அழைக்கப்பட்டது. கடலுக்கும் ஓடைக்குமிடையிலான இணைப்பு முகத்துவாரம் என இக்கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. 18ம் நூற்றாண்டளவில் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றலாயினர். தங்களது ஆட்சியினை நிலைப்படுத்துவதற்கான கோட்டை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன் முதற் கட்டமாக ஒல்லாந்தர் கிணறு ஒன்றினை கட்டினர்.
அவ்வாறிருக்கையில் ஒல்லாந்தர் தங்களது வர்த்தக நோக்கில் கப்பல்களை கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்நோக்கியதனால் கோட்டை அமைக்கின்ற வேலையினை இடையில் கைவிட்டு மட்டக்களப்பில் இன்று கச்சேரி அமைந்திருக்கும் இடத்தில் கோட்டையினை அமைத்துக்கொண்டார்கள். ஒல்லாந்தரினால் கட்டப்பட்ட கிணற்றினது சிதைவுகளை இன்றும் எம்மால் பார்க்கக் கூடியதாக உள்ளது. அத்தோடு இக்கிணறு அமைந்தள்ள சிறுபிரதேசம் இன்றும் ‘கோட்டைவாசல்’ என அழைக்கப்படுகிறது. ஒல்லாந்தர் வருகையின் முன்னர் கல்லாறு என அழைக்கப்பட்டது. ஒல்லாந்தர் கோட்டை அமைப்பதற்கு முயற்சி எடுத்ததனால் கோட்டைக்கல்லாறுஎன அழைக்கப்படலாயிற்று.
திறமையும் அறிவும் கல்வியும் செல்வச்செழிப்பும் அதிகளவு எனது ஊரில் கொட்டிக்கிடக்கிறது என்பதனை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கோட்டைக்கல்லாறு எங்கள் ஊரினிலே .இலங்கையிலே தலைசிறந்த சிற்பியாக திரு.கிருஷ்ணபிள்ளை குடும்பத்தினர், அத்துடன் வைத்தியத்துறையில் முறிவு வைத்தியத்துறையில் திரு.செல்லத்தம்பி குடும்பத்தினரும் , மேலும் கட்டிடக் கலை , தளபாடங்கள் தொடர்பான மர வேலைத் துறையிலும் , ஏனைய துறைகளிலும் வளர்ந்து செல்வச்செழிப்பும் விளங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
வைத்தியத்துறையில் ஆரம்பித்தால் திரு.நவரத்தினத்தில் நலம்பெற்று திரு.தர்சன் அவர்கள் வரையில் தரணியாண்டுகொண்டு இருக்கின்றனர்.
பொறியியல் துறையில் ஆரம்பித்தால் திரு.பஞ்சாட்ஷரம் அவர்களில் பவனி வந்து இன்று திரு.விகர்ணன் அவர்கள் வரைக்கும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டப் புள்ளி விவரவியலாளர், மோ ட் டார் போக்குவரத்து பரிசோதகர், மாவட் ட அஞ்சல் உத்தியோகத்தர் , கிழக்கு மாகாண சமுத்தி ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர், நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர், சட் ட த் தரணிமார், பல பட் ட தாரிகள், ஆசிரியர்கள், உதவி தவிசாளர் உட்பட 4 பிரதேசசபை உறுப்பினர்கள் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், இன்னும் எண்ணற்ற கல்விமான்களும் அரச உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.
பொறியியல் துறையில் ஆரம்பித்தால் திரு.பஞ்சாட்ஷரம் அவர்களில் பவனி வந்து இன்று திரு.விகர்ணன் அவர்கள் வரைக்கும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டப் புள்ளி விவரவியலாளர், மோ ட் டார் போக்குவரத்து பரிசோதகர், மாவட் ட அஞ்சல் உத்தியோகத்தர் , கிழக்கு மாகாண சமுத்தி ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர், நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர், சட் ட த் தரணிமார், பல பட் ட தாரிகள், ஆசிரியர்கள், உதவி தவிசாளர் உட்பட 4 பிரதேசசபை உறுப்பினர்கள் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், இன்னும் எண்ணற்ற கல்விமான்களும் அரச உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் எங்களுடைய ஊரில் எமது உறவுகளில் , புலம்பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் கால்பதித்து வேரூன்றி வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் , யூதர்களைப்போல் அறிவிலும், சீனர்களைப்போல் வர்த்தகத்திலும் அந்நாடுகளில் சொந்தத்தொழில்களில் மூலதனமிட்டு
வளர்ந்து பெரும் விருட்ஷமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
குறிப்பு: ''எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் போலாகுமா?'' என்ற தலைப்பில் 10 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதத்தின் ஆரம்ப நாட்களில் வெளிவரும் இலங்கை,இந்திய நாடுகளில் தமிழர் வாழ் ஊர்கள் பற்றிய கட்டுரை தொடர்ந்து வெளிவருகின்றன.அந்த வகையில் உங்கள் ஊரும் ஒருநாள் வெளிவரும். அதுவரை காத்திருங்கள்.- தீபம்
No comments:
Post a Comment