திருமண மேடையில் மணமக்களை வாழ்த்தி மடல் வழங்கும் வழக்கத்தினை நாம் இன்று கொண்டிருக்கிறோம். அது நல்ல செயல் தான்.வரவேற்கிறோம்.
ஆனால் வாழ்த்துவதற்காக நாம் யாரை எல்லாம் உதாரணத்திற்கு கூறவேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதுதான் சிந்திக்கப் படவேண்டிய ஒன்றாகும்.
எவரும் தம்மைப்போல் வாழ்கவென்று வாழ்த்துவதில்லை! ஒருவேளை யாருக்கும் தங்கள் வாழ்வில் திருப்தி இல்லாமல் இருந்திருக்கலாம்.
சிலர் வள்ளுவன், வாசுகிபோல் வாழ்கவென்று வாழ்த்துவார்கள்.ஆனால் இவர்களின் வாழ்க்கை வரலாறு அறியப்படாததொன்று.அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது யாரும் அறியாத ஒன்று. எனவே அப்படி வாழ்த்துதலும் பொருத்தமாக அமையாது.
சிலர் ராமன்,சீதை போல் வாழ்க வென வாழ்த்துவார்கள். அவர்களோ வாழ்ந்ததில்லை என்பதனையும் , சீதை பல வழிகளாலும் வஞ்சிக்கப்பட் வள் என்பதாலும் இதுவும் முழுக்க முழுக்க பொருத்தமாகத் தோன்றவில்லை.
சிலர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க என வாழ்த்துவார்கள். இதனைச் சொல்வேந்தர் சுகி-சிவம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
50 வருஷம் வாழ்ந்த கிழடு கட்டைகளை க் கேட்டாலே
'மனுசி எங்கை என்னை ப் புரிஞ்சுகொண்டது'. என்று மனுஷன் குறை சொல்வதும், '' இந்த மனுசனு எப்ப என்னைப் புரிஞ்சுகொள்ளுவரோ?என்று மனுஷி குறை சொல்வதும் புலம்பலாக அது தொடர்ந்துகொண்டிரு க்கிறது. எனவே புரிந்துகொண்டு வாழ்தல் என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று.
முடிவாக ,இதற்கு ஒரே வழி ''கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளல் கடினம் என்பதனைப் புரிந்து கொண்டு வாழ்க'' என்பதே மணமக்களை வாழ்த்துதல் என்பதற்கு சரியான கருத்து மட்டுமல்ல ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ நல் வழியாகும் என அவர் கூறுகிறார்.
💒💒💒💒💒💒💒💒💒தொகுப்பு:செ.மனுவேந்தன்💒💒💒💒💒💒💒💒💒
No comments:
Post a Comment