இந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்


ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் முகேஷ்  அம்பானி. இவர் பெட்ரோலில் இருந்து, புடவை, மொபைல் போன் வரை பலவிதமான தொழில்களில் ஈடுபட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு $6000 கோடி  தேறும். பில் கேட் சொத்தின் மதிப்பை $9500 கோடி ஆகும்! உலகின் பணக்காரர் வரிசையில் 18 ஆக வருகின்றார். இவ்வளவுக்கும் அவர் ஒரு
பல்கலைக் கழகம் சென்று படித்து முடிக்க இயலாமல் திரும்பியவர்; அப்பாவின் சாம்ராச்சியத்தைத்தான் தொடர்ந்து வளர்த்து வருகின்றார்.

இவர் வசிக்கும் வீடு 4500 சதுர மீட்டர் அளவு கொண்ட, 150  மீட்டர் உயர, 27 மாடி, நூறு கோடி டொலர் பிரமாண்ட கோபுர மாளிகை. இதைப் பராமரிக்க 600  முழு நேர ஊழியர்கள்நீச்சல் தடாகம், திரை அரங்கு,பல வரிசைப் பூத் தோடடம்மூன்று ஹெலி இறங்கு தளங்கள், சொந்த 180  இருக்கை A380 விமானம் என்று பல விதமான ஆடம்பர சாதனங்கள். இம் மாளிகை, உலகின் ஆகக் கூடிய மதிப்புள்ள தனி நபர் வீடு ஆகும். பக்கிங்காம் அரண்மனையே இதற்கு கிடட நில்லாது என்று  கருதப்படுகின்றது!

இவரின் மகளுக்கு சமீபத்தில் இன்னொரு செல்வந்தருடன் நடந்த திருமணத்தின் செலவு 14 கோடி டொலர்கள்! திருமணப் பந்தல் பிரித்தானிய நிறுவனம் ஒன்று அமைத்துக் கொடுத்தது. திருமணம் உடப்பூர் இத்தாலிய ஒபேராய் ஹோட்டலில் நடந்தது. உலகப் புகழ் இத்தாலியரால் திருமண உடை வடிவமைப்பு. அமெரிக்க ஹிலாரி கிளிண்டன் கூடி வந்திருந்தார்கள். அடுத்தடுத்து வரவேற்பு உபசாரங்களை நடந்தது. இதில் அமெரிக்க பிரபல பாப் பாடகர்கள் உட்படப் பல விதமான இந்திய, மற்றும்  சர்வதேச பிரபலங்கள் நிகழவுகள் நடத்தினார்கள்.

இவ்வளவுக்கும், இதே இந்தியாவில் 21 வீதத்தினர் நாளுக்கு $2  வருமானத்திலும், 60 வீதத்தினர் நாளுக்கு $3.10 வருமானத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்தியாவின் செல்வத்தில் 73% மான பங்கினை வெறும் 1 வீதத்தினர் கைவசம் மாட்டிக் கொண்டு இருக்கின்றது. இந்த இடைவெளி, சுரண்டல்களால் இன்னும் தொடர்ந்து கொண்டே போகின்றது.

அம்பானி தன பணத்தைத் தன் மகளுக்குத் தன் விருப்பப்படி செலவு செய்வேன் என்று அடித்துக் கூறினால், அவர் தயவை நம்பி இருக்கும் நாட்டுப் பொருளாதாரம், இலட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பு, அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் எல்லாம் அற்றுப் போய் விடுமே என்று அஞ்சிப் பேசாமல் இருக்க வேண்டி இருக்கின்றதே

🤑🤑🤑  🤑🤑🤑செல்வத்துரை,சந்திரகாசன் 🤑🤑🤑🤑🤑🤑

0 comments:

Post a Comment