வாழ்க்கை
ஒரு வரம்
வாழ்க்கை ஒரு அழகிய வரம்
வசந்த காலம்
செம்மையான கற்பகம்
வண்ணமாக பிடித்துவிட்டால்
அழகு கொள்ளும்
வஞ்சனையோடுபிடித்துவிட்டால்
வெறுப்பு சேரும்
வாழ்ந்துதான் பாரு
மண்ணோரம் பலகதைப்பேசும்
வாழ்வும் துதிப்பார் அதுவாய் வாழ்வார்
ஒளி
சூரியனே
என்னை சீண்டிய
ஒளி சூரியனே -நீ
முகில் கூட்டத்தில்
மறைந்து கொண்டதால்
நான் தேடும்
தேடல்கள் எல்லாம்
தோல்வியில் முடிகிறதடா
சிந்தனையை
கொடுத்துவிடு
உணர்வால் பந்தாடும் மனதை
சிந்தனையால் தீனி போட்டு
அமுக்கி விட மன தளர்ச்சி கூடி
மன அழுத்தங்கள் ஓடி போகுமடி
சின்னஞ்சிறு கிளியே_
--கண்ணம்மா
சங்கடங்களை
கருவில் சுமந்துவிட்டால்
சாய்ந்து போகுமே வாழ்வு
நீயும் கொஞ்சம்
உணர்வாய் சிந்தித்துவிடு.
குறைகளும் ஓடி போய்
முனைப்பை தீண்டி
ஞானமதனை
கொடுத்துவிடுமே
_கண்ணம்மா
இருளுக்கு ஒளி கொடுப்பது போல
இருளான மனதில் ஒளியான
சிந்தனையை கொடுத்துவிடு
வெயிலுக்கு ஏற்ற நிழல் இருப்பது போல
சலனமின்றி வாழ்வும் நகர்ந்து விடும்.
-காலையடி,அகிலன்.
No comments:
Post a Comment