சினிமா-சில புதினம்


ரஜனியின் ''பேட் ட ''
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன் ,திரிஷா , விஜய்சேதுபதி , சசிகுமார் , பாபிசிம்ஹா மற்றும் நவாசுதின் சித்திக் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பேட்ட.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமுழுவதும் பேட்ட படம் திரைக்கு வருகிறது.


மணிரத்தினம் படத்தில்  சூப்பர் ஸ்டார்..!
தற்போது மணிரத்தினத்தின் நீண்ட நாள் ஆசையான "பொன்னியின் செல்வன்" நாவலை மையமாக கொண்டு இயக்கும் புதிய படத்தில் விக்ரம், சிம்பு ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அவர்களை தொடர்ந்து , இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் இப்படத்தில் கமிட் ஆக உள்ளனர் என்ற செய்தி நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது.

இணையத்தில் ''விஸ்வாசம்''   

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்

  தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான  செய்தி வெளியாகியுள்ளது. அதாவது , விஸ்வாசம் படம் வெளியான சில வாரங்களிலேயே பிரபல ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ப்ரைம் இணையத்தில்  விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திகில் கிளப்ப வரும் நயன்தாரா
Image result for நயன்தாரா
கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஸ்  மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ்  இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி, ‘மாஆகிய குறும்படங்களையும்எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்படத்தையும் இயக்கிய சர்ஜூன்  'ஐரா' படத்தை இயக்கியுள்ளார்.
இதில் நயன்தாரா கதையின் நாயகியாக மிரட்டலாக நடித்துள்ளார். இதில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.   
 இந்த படத்தின் டீசர்  5ம் தேதி 5 மணிக்கு வெளியானது.


 இந்தியன் 2

எல்லோரும் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய நடிகை! இவர் அந்த பிரபலம் தானே
இந்தியன்  படத்திற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 18 ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் தென்கொரியவில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் Suzy Bae முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் தைவான் நாட்டில் எடுக்கப்படவுள்ளதாம்.
📹📹📹📹📹📹📹📹📹📹தொகுப்பு:கயல்விழி 📹📹📹📹📹📹📹📹📹📹

1 comment:

  1. அஜித் நடிக்கும் விஸ் வாசம் படத்தில் மொத்தம் 12 பாடலாம். 44.8 அதாவது பாடலுக்கு 45 நிமிடங்கள். சண்டைக்காடசிகள் குறைந்தது 45 நிமிடங்கள்.படம் 30 நிமிடம் தானா? ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

    ReplyDelete