"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 22

சங்க இலக்கியத்தில், வளைந்திருக்கும் வளையலுக்கு அடைமொழியாக வந்த ‘கோல்’ என்ற சொல்லாட்சி, பின் வளைந்து நெளிந்து வட்ட வடிவமாக வரையும் கோலத்திற்கும் ஆகியிருக்கலாம், ஏன் என்றால் பரிபாடல் 11: 99-100 இல் "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே கொற்றவை கோலம் கொண்டு ஒர் பெண்" என்ற ஒரு வரியை காண்கிறோம், இங்கு கோலம் வடிவத்தை குறிக்கிறது. அதே போல அதே பாட்டில் வரி  97,98 :" குவளைக் குழைக் காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள்" என்று கூறுகையில்...