முடிவறியாத பயணம்

வழித்தடம் எங்கும் வலிகள் மோத
வாழ வழி தெரியாமல் போகுதே
இருளை நோக்கி மனமது போக
இரவாகி மறந்து வாழ்வு போகுதே!

நிழல் இல்லாது நீளும் பயணத்தில்
நிறம் பார்த்து வெறுப்போர் முன்
பொன்னான மனமும்
வலிமையின்றி போகுதே!

எள்ளி நகையாடுவோர்  முன்
தொக்கிய உணர்வுகளும்
கண்ணீராய் வடிகிறதே !

கண்ட  காயங்களை
ஆற்றிடும் மனங்கள்
காணாமல் போனதால்
எரிகிறதே நெஞ்சம்!

தனிமை சிறையில்
மௌனங்கள் அடைக்க
தட்டி எழுப்பும்
வெற்றுப்  பொழுதுகள்
விதி இதுவென
விம்மிவிடும் ரணங்களால்
வீழ்ந்து போகும்
வாழ்வுப்  பயணமும்
முடிவறியாப் பயணமாக
கரைந்தே  கழியுதே!

                                                - காலையடி ,அகிலன் ராஜா



No comments:

Post a Comment