தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை

பொதுவாக நம் உடலில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்குமே மருத்துவரை நாடி செல்வதைவிட சில எளிய பயிற்சிகள் மேற்கொள்வதின் மூலம் அவற்றை சுலபமாக சரிசெய்யலாம். இக்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைசுற்றல் பிரச்னை ஏற்படுகிறது. 

உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முதலில் தலைசுற்றலில் தான் ஆரம்பிக்கும். இரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படும். இக்காலகட்டத்தில் 80 சதவீத பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைசுற்றல், மனச்சோர்வு ஆகிய பிரச்னைகள் ஏற்படுகிறது. சூன்ய முத்ரா பயிற்சி செய்வதன் மூலம் தலைசுற்றல் பிரச்னையை சரிசெய்யலாம். 

செய்யும் முறை:

நடுவிரலை மடக்கி கட்டை விரலை அதன் மீது பதிய வையுங்கள்.

மற்ற மூன்று விரல்களையும் நேராக நிமிர்த்தி வையுங்கள். இதுவே சூன்ய முத்திரை ஆகும். இந்த பயிற்சி தினமும் 45 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இந்த முத்திரை பயிற்சியை செய்வதன் மூலம் காதுவலி, காதில் சீழ் வடிதல், சரியான முறையில் காது கேளாமை போன்ற குறைபாடுகளை இந்த முத்ரா சரி செய்யும். அதுமட்டுமில்லாமல் பயண நேரங்களில் வரும் களைப்பு, தலைசுற்றல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இந்த முத்ரா அமைகிறது.

욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗욗

0 comments:

Post a Comment