திரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி


நடிகர் விக்ரம் 
நடிகர் விக்ரம் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்து வருகிறார். 'தூங்காவனம்' பட இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'மகாவீர் கர்ணா' படத்தில் அடுத்தாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிலையில் நடிகர் விக்ரம் இப்படத்தை தொடர்ந்து டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆக்‌‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி முதல்வரா?
ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'பேட்ட' படம் வரும் பொங்கலன்று வெளியாகவுள்ள நிலையில் ரஜினி அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஏற்றாற்போல் முழு அரசியல் படமாக இப்படத்தை முருகதாஸ் உருவாக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு 'நாற்காலி' என தலைப்பு வைக்க ஆலோசனைகள் நடப்பதாகவும், அதில் ரஜினி முதல்வராகவும் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயரும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை வைத்துநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்என்ற ஹிட் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தான் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  
இந்த படம் நாடக கலைஞராக இருந்து, புகழ் பெற்ற திரைப்பட நடிகராக உயரும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் நடிக்க மறுத்து விடுகிறார். அதன் பிறகு அவரது புகழுக்கு பங்கம் வருகிறது  ஏன், அப்படி ஒரு முடிவை எடுத்தார், அய்யாவாக வரும் விஜய் சேதுபதி யார், அவரின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளால் ஏற்படும் திருப்பமே சீதக்காதி படத்தின் கதையாக இருக்கும் எற எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீதக்காதி படம் திரில்லர் நிறைந்த பேய் படம் என்றும் இணயத்தில் வதந்தியை பரப்பி வருகின்றனர். இது உண்மையா என்பது டிசம்பர் 20ம் தேதி தெரிந்துவிடும்
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

0 comments:

Post a Comment