சினிமா ச் செய்திகள்



நடிகையர் திலகம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குனர் ராஜமவுலியின் படத்தில் கதாநாயகியாகவே நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேசுக்கு கிடைத்து இருக்கிறது.

ராஜமவுலி தற்போது  தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரண்டு பிரபலங்களை  வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயங்குவதாக கூறி ஹீரோக்களோடு தான் இருக்கும் புகைப்படத்தில் ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்
 
மகாநதி படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்ததற்காகவே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹

விஜய் நடிக்கவுள்ள 63வது படமான 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு .ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த படத்தின் நாயகி உள்பட நடிகர், நடிகைகள் இன்னும் யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் விவேக், 'தளபதி 63' படத்தில் தான் சத்தியமாக நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வில்லு' படத்திற்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் விவேக் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருகிறார் என்றும் தற்போது செய்தி கசிந்துள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹

நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலை இன்று வெளியிடுவதாக அறிவித்து 'கட்டப்பா இஸ் பேக்' என்று விளம்பரம் செய்யப்பட்ட படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்திற்கு 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்று தலைப்பு வைக்கப்பட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டரை திருமுருகன் காந்தி தற்போது வெளியிட்டுள்ளார். சஞ்சீவ் மீராசாஹிப் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் தீரன் இயக்கவுள்ளார். [SINIMA SEYTHIKAL]
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹

No comments:

Post a Comment