திரைப்படச் செய்திகள்


விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் தபதி 63 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  
இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இசையமைப்பாளராக .ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இப்படம் 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

தற்போது படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தில் இணையும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , இப்படத்தில் இந்தி நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் `பைரவாபடத்தில் நடித்திருந்த
டேனியல் பாலாஜியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலி தயாராகி விட்டார்.
ராஜமௌலி பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தினை இயக்க தயாராகி விட்டார்.

நான் , பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களின்  மூலம் இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில்  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். அவர் படங்கள் தெலுங்கு சினிமாவில் எந்த அளவுக்கு  வியாபாரம் ஆகிறதோ அதே அளவுக்கோ அல்லது அதற்கு மேலோ மற்ற மொழிகளிலும் வியாபாரம் செய்கிறது.

பாகுபலி 2-ன் விஸ்வரூப வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்தப் படத்தை இந்தியாவே ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு பாக்ஸ்ரகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையைப் படமாக்க தயாராகி விட்டார். இதில் ஜூனியர் என் டி ஆரும் ராம் சரணும் கதாநாயகர்களாக நடிக்க இருக்கின்றனர். தற்போது படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியிருக்கிறார். சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த பிரியாமணி இந்த படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பிரியாமணி ஏற்கன்வே ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் படத்தில் நாஞ்சில் சம்பத்
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனாபடத்தை தயாரித்ததை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்து பிளாக் ஷீப் என்ற யூ-ட்யூப் டீம் உருவாக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை கார்த்திக் வேனுகோபால் இயக்க, சீரியல் நட்சத்திரம் ரியோ கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

நேற்று இந்த படம் பூஜை போட்டு துவங்கப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பளரான சிவகார்த்திகேயன் பட பூஜையில் கலந்துகொண்டார். மேலும் இந்த பூஜையில் பிளாக் ஷீப் டீமை தவிர பிரபல அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் பங்கேற்றிருந்தார். இதனை தொடர்ந்துதான் இப்படத்தில் நாஞ்சில் சம்பத்தும் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது.

முன்னதாக நாஞ்சில் சம்பத் அரசியலைவிட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர், எல்.கே.ஜி என்ற அரசியல் நகைச்சுவை படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் இவருக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹📹

No comments:

Post a Comment