தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :37

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]



"பண்டைய சுமேரியரின் சமயம்"
[sumerian god of the sun:Utu/Shamash]
Ashnan-meso-sumer 13427058-standard
[Sumerian Goddess of Grain:Ashnan]                                                
 [Sumerian Goddess of Brewing and Beer:Ninkasi]                                  
தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை(கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பேசமயம்ஆகும். '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை (நற்செய்கைகளைச் செய்தல்கெட்ட செய்கைகளை விலக்குதல்) அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கோட்பாடு எனலாம். அப்படியான ஒரு சமயத்தை முதல் முதல் இந்த உலகில்-மேலே நாம் கூறியவாறு முறையானதும் ஒழுங்குபடுத்தியதுமான ஒரு ஆன்மீக நடைமுறைகளில் தம்மை ஈடுபடுத்தியவர்கள் அல்லது கடைபிடித்தவர்கள்-இந்த பண்டைய சுமேரியர்களே ஆகும்.

மேலும் பல முதலாவது கண்டுபிடிப்புகளின் படைப்பாளிகளும் சுமேரியர்களே
ஆகும்.அவர்களே முதல் முதல் பெரிய அளவிலான நீர்ப்பாசன வேளாண்மை செய்தவர்கள்;அவர்களே முதல் முதல் மக்கள் நிறைந்த நகர்ப்புற அமைப்பை நிறுவியவர்கள்;அவர்களே முதல் முதல் சிறப்பு தொழில் அடிப்படையில், படிநிலை கட்டமைப்புகள் கொண்ட சமுதாயம் [stratified societies]ஒன்றை அமைத்தவர்கள்;அவர்களே முதல் முதல் நிரந்தரமாக ஒழுங்குபடுத்திய படைகளை பராமரித்தவர்கள்; அவர்களே முதல் முதல் எண்ணையும்[கணிதத்தையும்] எழுத்தையும் மேம்படுத்தியவர்கள் அவர்களே முதல் முதல் சட்டத்தை  விருத்தி செய்து சொத்து பற்றிய கருத்துக்கு ஒரு ஒழுங்கு முறையான விளக்கம் அல்லது வடிவம் கொடுத்தவர்கள் ஆகும்.

இன்று நம்மிடம் பல இயற்கை நிகழ்வுகளிற்கு அல்லது அனர்த்தங்களுக்கு விஞ்ஞான அல்லது அறிவு பூர்வமான விளக்கம் உண்டு.ஏன் சூரியன் காலையில் உதிக்கிறான்,மாலையில் மறைகிறான் என்பது எமக்கு தெரியும்.அது போல எமக்கு எது மழையை தூண்டுகிறது,ஏன் இடி புயல் நேரிடுகிறது என்பதும் எமக்கு தெரியும்.ஆனால் பண்டைய சுமேரியர்களுக்கு,பல மர்மமான இயற்கை நிகழ்வுகளிற்கு உண்மையான அல்லது விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அல்லது விளக்கம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்று இருக்கவில்லை.ஆகவே அவர்கள் இயற்கை சக்திகளை உயிருள்ள ஒன்று என முடிவு எடுத்தார்கள்.அவர்களை பொறுத்த வரை இடி முழக்கம் ஒரு உயிருள்ள ஜீவன் அது போல சூரியன்,மழை,காற்று எல்லாமே ஒரு உயிருள்ள ஜீவன்கள் என நம்பினார்கள்.இப்படியான அவர்களின் நம்பிக்கை காரணமாக பண்டைய சுமேரியர்கள் பல இயற்கை சக்திகளை கடவுளாக வழிபட
தொடங்கினார்கள்.அதாவது சுமேரியர் முதலில் இயற்கையையே வழிபட்டனர். நிலம் நீர் காற்று என இயற்கையைப் போற்றினார்கள்.அவர்கள் ஒரு விவசாய சமுகம் என்பதால்,தமது உயிர் வாழ தேவையான வற்றுடன் தொடர்பு உடைய தெய்வங்களை முதலில் வழிபட்டார்கள்-நீர் கடவுள், மழை கடவுள்,சூரிய கடவுள்,சோளக் கடவுள் என பல கடவுள்களை வழிபட தொடங்கினார்கள்.ஒவ்வொரு இயற்கை சக்தியும் கடவுள் என திடமாக நம்பினார்கள்.ஆகவே இயற்கை வழிபாடே அவர்களின் சமயத்தின் மூலமாக இருந்தது.இயற்கை சக்திகளை அப்படியே சக்திகளாகவே அவர்கள் முதலில் வழிபட்டார்கள்.எப்படியாயினும், நாளடைவில் காலம் செல்லச் செல்ல மனித உருவம்  இந்த சக்திகளுடன் இணைக்கப்பட்டன.இந்த மனித உருவ கடவுள், இயற்கை சக்திகளை கட்டுப்படுத்துவதாக இப்ப அவர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்.அவர்களின் உலகம் முழுவது ஆண்-பெண் கடவுள்கள் பல பல நிரம்பின.சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் எல்லாமே கடவுள் ஆகின.தங்களை சுற்றி வளரும் நாணலை,தருவது பெண் தெய்வம் நாணல்[goddess of the reeds] என நம்பினார்கள்.அது போல தாம் வடிக்கும் பியரை தருவது பெண் தெய்வம் பியர் [goddess of the beer]என நம்பினார்கள்.

சுமேரியரின் கடவுள் பொதுவாக மனித உருவமாகவும் மனித பண்புகளை பேணுபவராகவும் இருந்தார்.சுமேரிய கடவுள்கள் சாப்பிடுகிறார்கள்,குடிக்கிறார்கள்,கல்யாணம் செய்கிறார்கள்,தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இடுகிறார்கள்.சுமேரிய கடவுள்  சிரஞ்சீவியாகவும் [அழிவற்றவராகவும்] மிக பலமுள்ளவராக இருந்த போதிலும்,அவர்கள்  காயம் படக் கூடியவர்களாகவும் கொல்லப்படக் கூடியவர்களாகவும் தோன்றுகிறார்கள். மேலும் ஒவ்வொரு கடவுளும் தெய்வீக அதிகாரத்தின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு தொகுப்புடன்[a set of rules and regulations of divine authority] தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது.இந்த  தெய்வீக உத்தரவு அல்லது கட்டளை "ME" என அழைக்கப்படுகிறது.இது ஒரு புனித வானுலகினதும்[இறைவனினதும்] பூமியினதும்[மனிதனினதும்] கோட்பாடு ஆகும்.இந்த கோட்பாடு”ME" ,மீ என உச்சரிக்கப்படாது.me> மெய்[‘Mai’] எனவே உச்சரிக்கப்படுகிறது."மெய்" என்பதற்கு சத்தி அல்லது ஆற்றல் என்றும் பொருளும் உண்டு.இந்த "மெய்" மிகவும் சமூக முக்கியம் உடையது.ஒவ்வொரு சுமேரிய சமுக வாழ்வின் தன்மையும் இதனால் கட்டுப்பாட்டுக்கு .உட்படுத்தப்படுகிறது அல்லது சீராக்கப்படுகிறது. உதாரணமாக,ரொட்டி சுடும் வெதுப்பகம் பற்றிய  "மெய்"யை , அதாவது நினைவு குறிப்பை ரொட்டி சுடுபவன் பெற,ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.ஏனென்றால்  நாகரிகத்தின் கண்டுபிடிப்பாளரான என்கி கடவுளின்[god Enki] பாதுகாப்பில் அங்கு, ஆலயத்தில் இதன் ஆவண மூலப் படிவம் வைக்கப்பட்டிருப்பதால் ஆகும்.இந்த குறிப்பிட்ட "மெய்",எப்படி, எப்பொழுது, எங்கே அந்த ரொட்டி சுடும் தொழிலை செய்வது  என்பதற்கான அறிவுறுத்தலை விரிவாக கொண்டிருக்கும்.அப்படியே சுமேரியரின் ஒவ்வொரு வாழ்வின் அம்சமும் அதற்கான "மெய்"யில் குறிக்கப்பட்டு இருக்கும்."வழிபாடு","அரசு","பாலியல் உறவு"... இப்படி எல்லா சுமேரியன் வாழ்வின் கூறுகளும் அங்கு இதேபோல் கையாளப்படுகிறது.அவர்களின் புராணக் கதை கடவுள்மார்கள்  பல "மெய்" களை தம்வசம் பெற்றுக்கொள்ள ஒருவருடன் ஒருவர் போர் நடத்தினார்கள் அல்லது ஒருவரிடம் இருந்து ஒருவர் அதை களவாடினார்கள் என கூறுகிறது. இந்த மெய்யை தெய்வீக உத்தரவு அல்லது  தெய்வீக சக்தி என கூறலாம்.இந்த "மெய்" ,ஒவ்வொரு கடவுளும் அகிலம் முழுவதையும் ஒரு திட்டத்தின் படி செயல் பட வைப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த திட்டம் என்லில்[god Enlil] என்ற கடவுளால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ஆகும்.

ஈனன்னை சீர்பியத்தில்[ஈனன்னா B][exaltation of Inana (Inana B)] ,பாடல் ஒன்றில் பல வரிகளில் "ME " மெய் பற்றி கூறப்பட்டுள்ளது.அதில் வரி ஒன்றையும் ஐந்தையும்  பார்ப்போம்.

பாடல்1/வரி 1:

1. நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய [nin-me-sar-ra u-dalla-e-a ]
சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள் [Lady of all the me's[divine powers], resplendent light]

பாடல்1/வரி 5:

5. மெய் இமின்பே சூ(ர்) சட்டுக [ me-imin-be su sa-du-ga]
ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள் [who has seized all the 'seven' me's[seven of its divine powers!]

மேலே கூறிய பாடலின் முதல் வரியே இன்றளவு சைவத்தின் ஓர் கூறாக இருக்கும் மெய்ஞானத்தை விளம்புகின்றது என்கிறார் முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு.கொற்றவையே இங்கு 'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என மேலும் பல சான்றுகளுடன் எடுத்து கூறுகிறார் இவர்.தமிழரின் சைவ சமயத்தில் சிவனை தத்துவன் எனவும் குறிப்பிடுகிறார்கள்.அதன் ஒரு பொருள் எல்லா சக்திகளினதும் தலைவர் என்பது .[Siva, as lord of all powers]

சங்க கால  தமிழர்கள் கூட முதலில் இயற்கையையே வழிபட்டார்கள்.உதாரணமாக [சந்திரனை] பிறையைத் தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,

‘‘வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே’’-(குறுந்தொகை - 307)

கன்னி மகளிர் தொழும்படி செவ்வானத்தில் திடீரென்று தோன்றிய பிறைச் சந்திரன் என்று குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது.இதனால் நமது முன்னோர்கள் இயற்கை ஆற்றலை தெய்வமாக வழிபட்டார்கள் என்பது தெளிவாகிறது.அது போல மரம்,கல்,நீர்,நட்சத்திரம்,கிரகங்கள் வழிபடப்பட்டுள்ளன.மேலும், தொல்காப்பியர்,

‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்"

என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.அதாவது தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ஆரம்பம் பகுதி:01 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்]Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:

பகுதி:38  வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:38

No comments:

Post a Comment