எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக
ஒரு
குறிப்பு
உண்டு.
எனவே
மிருகத்தில்
இருந்து
பரிணமித்த
மனிதனுக்கு
அது
தெரிந்து
இருக்க
அதிக
வாய்ப்புண்டு.
உதாரணமாக
உண்ணாவிரதம்
மூலம்
தேகத்தில்
உள்ள
நோய்
எதிர்ப்புச்
சக்தியானது
அதிக
வலிமையடைதலும்,
அதனால்
நீண்ட
நாட்கள்
நலமுடன்
வாழுதல்
ஆகும்.
அது
மட்டும்
அல்ல,
இந்த
உண்ணாவிரதம்
குழப்பமில்லாத,
பத்தியம்
என்று
கடுமையான
விதி
முறைகள்
இல்லாத,
மிகவும்
பத்திரமான
மருந்து
மருந்து
எனலாம்.
மேலும்
உண்ணா
விரதத்தால்,
உடல்
இலேசாக
மாறுகிறது.
தூய்மையடைகிறது.
மூளை
வளம்
அதிகரிக்கிறது.
இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
"நோயிலே
படுப்பதென்ன
பெருமானே-நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன
பெருமானே"
என்று
பாரதியும்
பாடுகிறான்.
அதாவது
”நோய்
வந்த
போது
நீ
சோர்ந்து
படுத்துக்
கொள்கிறாய்.
ஆனால்
நோன்பிருக்கும்
போது
உண்ணாதிருந்தும்
மிகத்தெம்புடன்
உற்சாகமாய்
காணப்படுவதன்
காரணம்
என்ன” என்று
வியக்கிறான்
பாரதி.
உண்மையில்
உண்ணா
நோன்பு
இருக்கும்
போது
உயிராற்றல்
உடலில்
உள்ள
கழிவுப்
பொருள்களை
எவ்வளவுக்கு
முடியுமோ
அவ்வளவுக்கு
வெளியேற்றி
விடுகிறது.
இதனால்
உடலின்
உறுப்புகள்
தூய்மையடைகின்றன.
மனமும்
தூய்மை
யடைகிறது.
உண்மையாக
உயிர்த்தெழ
முடிகிறது
என்று
பாரதி
சுட்டிக்
காட்டுகிறான்.
நோன்பு
அல்லது
பசித்திரு
என்றால்
பட்டினி
கிடப்பது
அல்ல.
வயிற்றைக்
காயப்போடுதல்
ஆகும்.
இதை
சித்த
ஆயுர்
வேத
மருத்துவர்கள்
மிகச்சிறந்த
மருந்து
என்பார்கள்.
இல்லாமையால்
பட்டினி
கிடப்பதற்கும்,
எல்லாம்
இருந்தும்
உண்ணாமல்
நோன்பு
இருப்பதற்கும்
நிறைய
வேறுபாடு
உண்டு.
இது
உடலுடன்
நேரடியாக
சம்பந்தப்
பட்டது
அல்ல,
மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும்
ஒரு
ஒழுக்கம்
அல்லது
ஒரு
செயல்
முறை
தான்
இந்த
விரதம்
என்பது
ஆகும்.
சுருக்கமாக
விரதம்
என்பது
மனதை
ஒரு
முகப்
படுத்தல்
அல்லது
புலன்களை
அடக்குதல்
என
நாம்
கூறலாம்.
மனிதரை
நெறிப்படுத்துவதற்கும்
முறைப்படுத்துவதற்கும்
தோன்றிய
நெறிகளில்
ஒன்று
இந்த
விரதம்
என்றும்
கூறலாம்.
மேலும்
இந்த
நோன்பிற்கு
சிறந்த
அடையாளம்
என்ன
என்பதை
பார்த்தால்
அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.
பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை
பேண,
மனதை
ஒரு
முகப்
படுத்த,
நோன்பு
இருக்கும்
படி
பெரும்பாலும்
கோரப்பட்டன
பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது
‘துன்பத்தினைத்
தாங்குதல்
‘ என்றும்
பொருள்
கொள்ளலாம்.
தாமே
துன்பத்தினை
தாங்கிக்
கொண்டு,
தங்களை
நெறிப்படுத்திக்
கொள்ளும்
நெறி
இதுவாகும்.
இது
ஒரு
குறிக்கோளைக்
கொண்டும்
உள்ளடக்கியது.
உதாரணமாக
அன்று
சேர
மன்னன்
பெருஞ்சேரல்
இரும்பொறைக்கும்,
சோழ
அரசன்
கரிகாலனுக்கும்
சண்டை
வந்தது.
அந்தச்
சண்டையில்
பெருஞ்சேரலுக்கு
முதுகில்
அம்பு
தைத்து
காயம்
ஏற்பட்டது.
அதனால்
அவர்
நோன்பு
இருந்து
[வடக்கிருந்து]
உயிர்
துறந்தார்.
அன்று
பெண்கள்
தாம்
விரும்பும்
ஆடவனைக்
கணவனாகப்
பெறுவதற்காகத்
தை
நோன்பு
நோற்று
நீராடுவார்கள்.
அதன்
வழியில்
திருமாலை
கணவனாக
அடைய
வேண்டி
ஆண்டாளும்
பாவை
நோன்பு
இருந்தாள்.
மேலும்
உடலுக்கு
நலம்
விளைவிப்பதற்காக
உண்ணாவிரதம்
பொதுவாக
இருந்தாலும்,
உலகின்
பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின்,இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள். ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன.பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.
பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும்,
கிறித்தவர்களும்
‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting
and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்.
பகுதி: 16 வாசிக்கக் கீழேயுள்ள தலைப்பினில் அழுத்துக...
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 16
0 comments:
Post a Comment